மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாள் பயணம்: கொடிசியா வர்த்தகக் கண்காட்சியை ஜூன் 25 ஆம் தேதி தொடங்கிவைத்தார்
மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இரண்டு நாள் பயணமாக ஜூன் மாதம் 25 ஆம் தேதி அன்று கோயம்புத்தூர் வந்தவர். அன்று காலை புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அமைச்சர், பிற்பகல் 2.40 மணியளவில் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தார்.
பின்னர் மருத்துவ துணிகளுக்கான தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்க சிறப்பு மையத்திற்கு சாலை வழியாக பயணம் செய்த அமைச்சர், அங்கு கவுன்சில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து பிற்பகல் 4.00 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில் நிறுவனங்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தகக் கண்காட்சியை திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி வலைப்பின்னல் சில்லரை வியாபாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
பின்னர் மாலை 6.20 மணியளவில் தென்னிந்திய மில்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பியூஷ் கோயல் அதைத் தொடர்ந்து தொழில் நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் இரவு நேர விருந்தில் கலந்துகொண்டார்.
இரண்டாவது நாளான ஜூன் மாதம் 26 ஆம் தேதி இன்று காலை 10.40 மணியளவில் திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையத்தில் உள்ள நேதாஜி ஆயத்த ஆடைகள் பூங்காவை அவர் பார்வையிட்டார். பின்னர் நண்பகல் வாக்கில் பாப்பீஸ் ஹோட்டலில் ஏற்றுமதியாளர்களைச் சந்திக்கும் மத்திய அமைச்சர், அங்கு நடைபெறும் பாராட்டு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் பங்கேற்கும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனும் பங்கேற்பார்.
இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கு பின்னர் பியூஸ் கோயல், ஜூன் மாதம் 26 பிற்பகல் 3.15 மணிக்கு கோயம்புத்தூரிலிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறார்.
கருத்துகள்