முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேசிய சூரியசக்தி தளத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்

மின்சாரத் துறையின் புதுப்பிக்கப்பட்ட விநியோகப் பிரிவுத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

'ஒளிமிகு இந்தியா ஒளிமயமான எதிர்காலம் - மின்சாரம் @2047' திட்டத்தின் நிறைவுவிழாவில் கலந்து கொண்டார்

ரூ. 5200 கோடிக்கும் அதிகமான என்டிபிசியின் பல்வேறு பசுமை மின்சார திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் அடிக்கல் நாட்டினார்

தேசிய சூரியசக்தி தளத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்

"எரிசக்தி துறையின் பலம், எளிதாக தொழில் செய்வதற்கும், எளிதாக வாழ்வதற்கும் முக்கியமானது"

"இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள், அர்ப்பணிப்பு மற்றும் அதன் பசுமை இயக்கத்தின் அபிலாஷைகளை வலுப்படுத்தும்""மின்சார வாகனங்களில் எரிபொருள் மின்கலங்களைக் கொண்ட முதல் இடமாக லடாக் இருக்கும்"

"கடந்த 8 ஆண்டுகளில், நாட்டில் சுமார் 1,70,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளது"

"அரசியலில், மக்களுக்கு உண்மையைச் சொல்ல தைரியம் இருக்க வேண்டும், ஆனால் சில மாநிலங்கள் அதைத் தவிர்க்க முயற்சிப்பதை நாங்கள் காண்கிறோம்"

‘’சுமார் ரூ.2.5 லட்சம் கோடி மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் சிக்கியுள்ளன’’

'ஒளிமிகு இந்தியா ஒளிமயமான எதிர்காலம் - மின்சாரம் @2047' திட்டத்தின் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியின் போது, புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். தேசிய அனல்மின்கழகத்தின் பல்வேறு பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய சூரியசக்தி தளத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். மண்டியைச் சேர்ந்த திரு ஹன்ஸ்ராஜ், குசும் திட்டத்தில் தனது அனுபவத்தைப் பற்றி பிரதமரிடம் தெரிவித்தார். இத்திட்டத்தில் மற்ற விவசாயிகள் எப்படி ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பிரதமர் கேட்டறிந்தார். திரு ஹன்ஸ்ராஜ், இந்தத் திட்டத்திற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்ததோடு, இந்தத் திட்டம் தனக்கும் தனது குடும்பத்துக்கும் எப்படி உதவியது என்பதை விவரித்தார்.

திரிபுராவின் கோவாய் பகுதியைச் சேர்ந்த திரு கலஹா ரியாங், தனது கிராமத்தில் மின்சாரத்தின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பிரதமரிடம் தெரிவித்தார். சூரிய சக்திக்குப் பிறகு மண்ணெண்ணெய் மீதான சார்பு குறைந்துள்ளது என்றார். மின்சாரத்தின் வருகையால் கொண்டுவரப்பட்ட மற்ற மாற்றங்கள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். மொபைல் போன்களை சார்ஜ் செய்ய இப்போது சார்ஜ் செய்ய நீண்ட தூரம் பயணித்த நிலை மாறி இப்போது சொந்த வீடுகளிலேயே சார்ஜ் செய்ய முடிகிறது என்று திரு ரியாங் கூறினார். சூரிய சக்தி குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தியுள்ளது, உள்ளூர் தொழில்கள் மற்றும் மாலை வாழ்க்கை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதாக அவர் கூறினார். தொலைக்காட்சியில் அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி தொலைக்காட்சி சேனல்களைப் பயன்படுத்துமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். மின்சாரத்தை சேமிக்குமாறும்  பிரதமர் வலியுறுத்தினார்.

தீன்தயாள் உபாத்யாயா கிராம ஜோதி திட்டத்தின் பயனாளியான விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரு காகு கிராந்தி குமார், தனது வாழ்க்கையில் மின்சாரத்தின் நேர்மறையான தாக்கத்தை விவரித்தார். ஒவ்வொரு குடிமகனும் முன்னேறினால்தான் நாடு முன்னேறும் என்று கூறிய பிரதமர், நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதிகள் வந்து சேருவதாக திருப்தி தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டுத் திட்டத்தின் பயனாளியான வாரணாசியைச் சேர்ந்த திருமதி பிரமிளா தேவியை பிரதமர் ஹர் ஹர் மகாதேவ் எனக்கூறி வரவேற்றார். வாரணாசி நாடாளுமன்ற உறுப்பினரான பிரதமர், பாபா விஸ்வநாத்துக்கு தனது சார்பில் மரியாதை செலுத்தும்படி கேட்டுக் கொண்டார். மேல்நிலை கம்பிகள் படிப்படியாக அகற்றப்பட்டு சிறந்த பாதுகாப்பு மற்றும் அழகியல் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

அகமதாபாத்தைச் சேர்ந்த திரு தீரன் சுரேஷ்பாஹி படேல் சோலார் பேனல்களை நிறுவிய அனுபவத்தைப் பற்றி பேசினார். கூரை தகடுகளை நிறுவியதன் மூலம் தீரன்பாய் மின்சார விற்பனையாளராக மாறினார் என்று பிரதமர் கூறினார். 2047ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி துறையில் நாட்டின் நம்பிக்கையான நிலையை உறுதி செய்ய கடந்த ஆண்டில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், இந்த விஷயத்தில் மக்களின் பங்களிப்பு மிகப்பெரிய பலமாக உள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி மற்றும் மின் துறைகளுக்கு பெரும் பங்கு உள்ளது என்றார். எரிசக்தித் துறையின் பலம், தொழில் தொடங்குவதற்கும், எளிதாக வாழ்வதற்கும் முக்கியமானது. இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள், மாவட்டத்தின் பசுமை ஆற்றல் மற்றும் எரிசக்தி பாதுகாப்பின் திசையில் குறிப்பிடத்தக்க படிகள் என்று அவர் கூறினார். இந்தத் திட்டங்கள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகள், அர்ப்பணிப்பு மற்றும் அதன் பசுமை இயக்கத்தின் அபிலாஷைகளை வலுப்படுத்தும் என்றார் அவர். லடாக் மற்றும் குஜராத்தில் இரண்டு பெரிய பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்கான பணிகள் இன்று தொடங்குவதாக பிரதமர் அறிவித்தார். லடாக்கில் அமைக்கப்படும் ஆலை, நாட்டில் உள்ள வாகனங்களுக்கு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும். பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான போக்குவரத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதை சாத்தியமாக்கும் நாட்டின் முதல் திட்டமாக இது இருக்கும். எரிபொருள் மின்கலங்களைக் கொண்ட மின்சார வாகனங்கள் இயங்கத் தொடங்கும் நாட்டின் முதல் இடமாக லடாக் விரைவில் இருக்கும். இது லடாக்கை கார்பன் அற்ற பிராந்தியமாக மாற்ற உதவும் என்று அவர் கூறினார்.

பெட்ரோல் மற்றும் விமான எரிபொருளில் எத்தனால் கலப்புக்குப்  பிறகு, தற்போது  இயற்கை எரிவாயு குழாய்களில் பசுமை  ஹைட்ரஜனை கலப்பதை நோக்கி நாடு நகர்ந்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இது இயற்கை எரிவாயு மீதான இறக்குமதி சார்பைக் குறைக்கும் என்று அவர் கூறினார்.

2014ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த மோசமான மின்நிலைமையை நினைவுகூர்ந்த பிரதமர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டின் மின்துறையின் ஒவ்வொரு பகுதியையும் மாற்றியமைக்க அரசாங்கம் முன்முயற்சி எடுத்ததை நினைவுபடுத்தினார். மின் அமைப்பை மேம்படுத்த உற்பத்தி, பரிமாற்றம், விநியோகம் மற்றும் இணைப்பு ஆகிய நான்கு வெவ்வேறு பிரிவுகள்  ஒன்றாகச் செயல்பட்டன. கடந்த 8 ஆண்டுகளில், நாட்டில் 1,70,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுவு திறன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ஒரே நாடு ஒரே மின் உற்பத்தித் திட்டம் இன்று நாட்டின் பலமாக மாறியுள்ளது. முழு நாட்டையும் இணைக்கும் வகையில் சுமார் 1,70,000 சுற்று கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள் போடப்பட்டுள்ளன. மேலும், சௌபாக்யா திட்டத்தின் கீழ் 3 கோடி இணைப்புகளை வழங்குவதன் மூலம், செறிவூட்டல் இலக்கை நெருங்கி உள்ளோம் என்றும் அவர் கூறினார்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உருவாக்க முடிவு செய்துள்ளோம் என்று பிரதமர் கூறினார். இன்று நாம் இந்த இலக்கை நெருங்கிவிட்டோம். இதுவரை, புதைபடிவமற்ற மூலங்களிலிருந்து சுமார் 170 ஜிகாவாட் திறன் நிறுவப்பட்டுள்ளது. இன்று, நிறுவப்பட்ட சூரிய சக்தியின் அடிப்படையில் உலகின் முதல் 4-5 நாடுகளில் இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார். உலகின் மிகப் பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் பல இன்று இந்தியாவில் உள்ளன. நாட்டில் இன்று மேலும் இரண்டு பெரிய சூரியசக்தி ஆலைகள் கிடைத்துள்ளன. தெலுங்கானா மற்றும் கேரளாவில் கட்டப்பட்ட இந்த ஆலைகள் நாட்டிலேயே முதல் மற்றும் இரண்டாவது பெரிய மிதக்கும் சூரியசக்தி ஆலைகள் ஆகும். வீடுகளில் சூரியசக்தி தகடுகள் அமைக்க ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுடன், மின்சாரத்தை சேமிப்பதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக பிரதமர் கூறினார். “மின்சாரத்தை சேமிப்பது என்பது எதிர்காலத்தை வளமாக்குவதாகும். பிரதமர் குசும் திட்டம் இதற்கு சிறந்த உதாரணம். விவசாயிகளுக்கு சூரியசக்தி பம்ப் வசதி செய்து தருகிறோம், வயல்களின் ஓரத்தில் சூரியசக்தி தகடுகள்  அமைக்க உதவுகிறோம்,'' என்றார் அவர்.

நாட்டில் மின் நுகர்வு மற்றும் கட்டணங்களைக் குறைப்பதிலும் உஜாலா திட்டம் பெரும் பங்காற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் மின்கட்டணத்தில் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சேமிக்கப்படுகிறது.

காலப்போக்கில், நமது அரசியலில் கடுமையான சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். அரசியலில், மக்களுக்கு தைரியம் வேண்டும், உண்மையைச் சொல்ல வேண்டும், ஆனால் சில மாநிலங்கள் அதைத் தவிர்க்க முயற்சிப்பதைப் பார்க்கிறோம். இந்த உத்தி குறுகிய காலத்தில் நல்ல அரசியலாகத் தோன்றலாம். ஆனால், இன்றைய உண்மையை, இன்றைய சவால்களை, நாளை, நம் குழந்தைகளுக்காக, நம் வருங்கால சந்ததிக்காக தள்ளிப்போடுவது போன்றது. இன்றைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தவிர்த்து எதிர்காலத்திற்காக அவற்றை விட்டுச் செல்லும் இந்தச் சிந்தனை நாட்டுக்கு நல்லதல்ல என்றார். இந்தச் சிந்தனை செயல்முறை பல மாநிலங்களில் மின்துறையை பெரும் பிரச்சனைகளுக்குள் தள்ளியுள்ளது.

நமது விநியோகத் துறையில் இழப்பு இரட்டை இலக்கத்தில் உள்ளது என்றார் பிரதமர். அதேசமயம் உலகின் வளர்ந்த நாடுகளில் இது ஒற்றை இலக்கத்தில் உள்ளது. அதாவது, நமக்கு மின்சாரம் விரயமாகிறது, எனவே மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய தேவைக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும். பல மாநிலங்களில் விநியோகம் மற்றும் பரிமாற்ற இழப்புகளை குறைப்பதில் முதலீடு பற்றாக்குறை உள்ளது என்றார். பல்வேறு மாநிலங்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிலுவைத் தொகை உள்ளது என்பதை அறிந்து மக்கள் ஆச்சரியப்படுவார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பணத்தை மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பல அரசுத் துறைகள், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து மின் பகிர்மான நிறுவனங்கள் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் மின்சாரத்திற்கான மானியத்திற்காக கட்டப்பட்ட பணத்தைக் கூட இந்த நிறுவனங்களால் உரிய நேரத்தில் முழுமையாகப் பெற முடியவில்லை என்றார். இந்த நிலுவைத் தொகையும் ரூ.75,000 கோடிக்கு மேல் உள்ளது. மின் உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்களின் சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் சிக்கியுள்ளது.

நிலுவையில் உள்ள மாநிலங்கள், அவற்றை விரைவில் தீர்க்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும், நாட்டு மக்கள் நேர்மையாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும்போதும், சில மாநிலங்கள் மீண்டும் மீண்டும் நிலுவைத் தொகையை ஏன் செலுத்துகின்றன என்பதற்கான காரணங்களை நேர்மையாகச் சிந்தித்துப் பாருங்கள்? இது அரசியல் தொடர்பான விஷயம் அல்ல, நாட்டு  நிதி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவது தொடர்பானது என்று அவர் கூறினார்.

மின்சாரத் துறையின் ஆரோக்கியம் அனைவரின் பொறுப்பு என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவூட்டி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

பிரதமரின் தலைமையின் கீழ், அரசாங்கம் மின் துறையில் பல வழித்தட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் துறையை மாற்றியமைத்துள்ளது, அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் கிடைப்பதில் கவனம் செலுத்துகிறது. முன்பு மின்சாரம் கிடைக்காத சுமார் 18,000 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டது. கடைசி மைல் வரை மின்சாரத்தைக் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

மின் அமைச்சகத்தின் முதன்மையான புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டம், செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடியிலான இந்தத் திட்டம் நவீனமயமாக்கல் மற்றும் விநியோக உள்கட்டமைப்பை வலுப்படுத்த நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, நம்பகத்தன்மை மற்றும் விநியோகத்தின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. நுகர்வோர் இழப்புகளை 12-15% இந்திய அளவில் குறைக்கவும் ,2024-25ல் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் இழப்பு இல்லாமல்  குறைக்கவும் இலக்கு வைத்துள்ளது.

நிகழ்ச்சியின் போது, ரூ.5200 கோடி மதிப்பிலான என்டிபிசியின் பல்வேறு பசுமை மின்சார  திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் அடிக்கல் நாட்டினார். தெலங்கானாவில் 100 மெகாவாட் திறன் கொண்ட ராமகுண்டம் மிதக்கும் சூரியசக்தி திட்டத்தையும், கேரளாவில் 92 மெகாவாட் திறன் கொண்ட காயங்குளம் மிதக்கும் சூரியசக்தி திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். ராஜஸ்தானில் 735 மெகாவாட் திறன் கொண்ட நோக் சூரியசக்தி திட்டம், லேயில் பசுமை ஹைட்ரஜன் இயக்கம் திட்டம் மற்றும் குஜராத்தில் இயற்கை எரிவாயுவுடன் கவாஸ் பசுமை ஹைட்ரஜனை கலக்கும் திட்டத்திற்கும் பிரதமர்  அடிக்கல் நாட்டினார்.

ராமகுண்டம் திட்டம் 4.5 லட்சம் 'மேட் இன் இந்தியா' சோலார் பிவி வகை  இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சோலார் பிவி திட்டமாகும். காயங்குளம் திட்டமானது, தண்ணீரில் மிதக்கும் 3 லட்சம் 'மேட் இன் இந்தியா' சோலார் பிவி பேனல்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மிதக்கும் சோலார் பிவி திட்டமாகும்.

ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள நோக் என்ற இடத்தில் உள்ள 735 மெகாவாட் சோலார் பிவி திட்டம், ஒரே இடத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு உள்ளடக்கத் தேவை அடிப்படையிலான சோலார் திட்டமாகும். லே, லடாக்கில் உள்ள பசுமை ஹைட்ரஜன் மொபிலிட்டி திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகும், மேலும் லே மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐந்து எரிபொருள் மின்கலப் பேருந்துகளை இயக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முன்னோடித் திட்டமானது இந்தியாவில் பொது பயன்பாட்டிற்காக எரிபொருள் செல் மின்சார வாகனங்களின் முதல் வரிசைப்படுத்தலாகும். என்டிபிசி கவாஸ் நகரியத்தில்  உள்ள பசுமை ஹைட்ரஜன் கலப்பு முன்மாதிரி திட்டம் இயற்கை எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க உதவும் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் கலப்பு திட்டமாகும்.

தேசிய சூரியசக்தி தளத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார், இது விண்ணப்பங்களை பதிவு செய்வதிலிருந்து தொடங்கி, ஆலையை நிறுவி ஆய்வு செய்த பிறகு குடியிருப்பு நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் மானியங்களை விடுவிப்பது வரை மேற்கூரை சூரியசக்தி ஆலைகளை நிறுவும் செயல்முறையை ஆன்லைனில் கண்காணிக்கும்.

தற்போது நடைபெற்று வரும் ‘விடுதலையின் அமிர்தப்பெருவிழா’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 'ஒளிமிகு இந்தியா ஒளிமயமான எதிர்காலம் - மின்சாரம் @2047' ஜூலை 25 முதல் 30 வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த எட்டு ஆண்டுகளில் மின் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இது காட்டுகிறது. இது குடிமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலமும், அரசின் திட்டங்களில் பங்கேற்பதன் மூலமும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.