சிவகங்கை - மேல கொன்னகுளம், திருப்பாச்சேத்தி - மானாமதுரை மற்றும் சூடியூர்- பரமக்குடி ரயில்வே நிலையங்களிடையே ஆகஸ்ட் மாதம் ரயில் பாதை பராமரிப்புப் பணி நடக்கும் நிலையில்
இராமேஸ்வரம்--மதுரை முன்பதிவில்லாத சிறப்பு இரயில் ஆகஸ்ட் மாதம்., 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை வியாழக்கிழமை தவிர இராமேஸ்வரத்திலிருந்து காலை 11.00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 1:30 மணிக்கு 150 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும்.
மதுரை--இராமேஸ்வரம் சிறப்பு ரயில்
மதுரையிலிருந்து மதியம் 12:30 மணிக்கு பதில் மதியம் 1:10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். திருச்சிராப்பள்ளி-மானாமதுரை - திருச்சிராப்பள்ளி முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் மாதம்.,1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை சிவகங்கை-மானாமதுரை ரயில்வே நிலையங்களிடையே பகுதியாக இரத்து செய்யப்படும்.
திண்டுக்கல் - அம்பாத்துரை நிலையங்களிடையே பராமரிப்புப் பணியால் ஆகஸ்ட் மாதம்., 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளிலும் கோயமுத்தூர் - -நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில் 90 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். சென்னை-குருவாயூர் விரைவு ரயில் மதுரை கோட்டப்பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடங்கள், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்