புதுக்கோட்டை நகர் திருக்கோகர்ணத்தில் பிரகதம்பாள் திருக்கோகர்னேஸ்வரர் கோவில்
தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளது புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர்கள் வழிபாடு நடத்தி காலப் பழமை வாய்ந்த கோவில். புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கோவிலாகவும் திகழ்கிறது. இங்கு ஆடித்திருவிழா கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகள் நடைபெறாமலிருந்த நிலையில் ஜூலை மாதம் 23 ஆம் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் ஒன்பதாவது திருநாளான இன்று ஆடிப்பூரத் தேரோட்டம் நடந்த நிலையில் 300 க்கும் மேற்பட்டோர் குழுமி இருந்த நிலையில் காலை 8. 50 மணிக்கு முதல் சப்பரத்தில் விநாயகரும், இரண்டாவது சப்பரத்தில் முருகனும், மூன்றாவதாகத் தேரில் ஸ்ரீ பிரகதம்பாளும், நான்காவது தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளியிருக்க. ஒரே நேரத்தில் திரளான பக்தர்கள் தேரை இழுத்ததால், நிறுத்துவதற்காகச் சக்கரத்தில் கட்டை போட்ட போது விபத்து நடந்ததாகத் தெரிகிறது. பக்தர்கள் மீது தேர் விழுந்ததில் ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். பொதுமக்களுடன் தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்த் திருவிழா ஏற்பாடுகள் சரியாகச் செய்யப்பட்டதா, தேர் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது. தேரோட்டம் தொடங்கி இரண்டு அடிகள் இழுத்தவுடன் பிரகதாம்பாள் எழுந்தருளியிருந்த தேர் எதிர்பாராத விதமாக சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் சிக்கிக் கொண்டனர் அவர்களை அருகே இருந்தவர்கள் மீட்டனர். இதில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறை வாகனங்கள் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் மயக்கமுற்ற நிலையில் அவர்கள் அதே இடத்தில் முதலுதவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு தேர் விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று விபத்தில் சிக்கியவர்களை பார்வையிட்டார் பின்னர் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா (இவர் தான் சமீபத்தில் அழகர் கோவிவில் இருந்து மாறுதலாகி வந்தவர்) ஆகியோர் விபத்துக்குள்ளான தேரை பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில் தேர் விபத்தான சம்பவம் குறித்து ஆட்சியர் கவிதா ராமு காவல்துறையினர் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரியிகளிடம் கேட்டு விபரம் தெரிந்து கொண்டார்.
மேலும் இந்த விபத்தானது தேர் அடித்தளம் முறையாக அமைக்கப்படாததாலேயே நிகழ்ந்ததாகவும் அடித்தளத்திலுள்ள கிளாம்புகள் முறையாக இல்லை என்றும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் இந்தாண்டு தேரோட்டம் நடைபெறும் பொழுது வெள்ளோட்டம் பார்த்து தேர் முறையாக பழுதில்லாமல் உள்ளதா என்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் வெள்ளோட்டம் நடத்தப்படாமல் தேரோட்டமானது நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக தேர் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், இரண்டு அடி கூட தேர் வராத நிலையில் துரதிஷ்டவசமாக தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது என்றும் அதே நிலையில் தேர் சிறிது தூரம் இழுத்து வந்திருந்து அப்போது தேர் சாய்ந்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஆகி இருக்கும் என்றும் பொதுமக்கள் கூறினர்.மேலும் இந்த விபத்தை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவம் ஏற்படாமல் இருக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இந்து சமய அறநிலையத்துறையும் மாவட்ட நிர்வாகமும் செய்ய வேண்டுமென பொதுமக்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்தனர்.
சம்பவம் குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா கூறுகையில், “அனைத்து வித அனுமதியும் பெற்ற பின்னர் தான் இந்தத் தேரோட்டமானது தொடங்கியதாகவும் பொதுப்பணித்துறை சான்றளித்த பின்னரே தேரோட்டம் நடைபெற்றதாகவும் இரண்டாண்டு காலமாக தேரோட்டம் நடைபெறாததால் அதிகமாக கூடியிருந்த மக்கள் தேரை வேகமாக இழுத்ததால் தேர் சாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தேர்முறையாக இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டிற்கு விசாரணை செய்து அது போன்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற நடைபெறாமலிருக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் தேர் சாய்ந்த இடத்தில் பொதுமக்கள் குவிந்ததால் அங்கு குவிக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை கலைந்து போகச் செல்லி வலியுறுத்தி தேர் சாய்ந்த இருபுற சாலைகளிலும் பேரிக்காடுகளை வைத்து பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சாய்ந்த தேரிலிருந்த சாமி சிலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் இரண்டு கிரேன் உதவியுடன் நீண்ட நேரம் போராடி சாய்ந்த தேர் நிமிர்க்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழமை வாய்ந்த கோவிலின் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேர் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுவரை இந்த ஆண்டு நடந்த மூன்றாம் தேர்திருவிழா விபத்தாகும்... தேர் ஓட வீதிகள் சரியாக இருக்க வேண்டும் அதுவும் ஒரு காரணம்
கருத்துகள்