பொதிகை தொலைக்காட்சி செய்திப் பிரிவு இயக்குனராக குருபாபு பலராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்
இந்திய தகவல் பணி சேவையில் 1995 ஏப்ரல் மாதம் இணைந்த குருபாபு பலராமன், சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி ஆசிரியராக பணியை தொடங்கினார். பின்னர் இவர் அங்கேயே உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். 2009ம் ஆண்டு துணை இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்று, சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தின் செய்திப் பிரிவில் பணியாற்றி இருப்பதுடன், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்னைப் பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் 2019-ல் இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்தில் பணியாற்றினார்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் பணிபுரிந்த போது அவர், இந்திய பத்திரிகை பதிவாளர் பிரிவின் துணைப்பதிவாளராகவும் கூடுதல் பொறுப்பு வகித்துள்ளார்.
இவர், தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராவராவார்
கருத்துகள்