திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலமடுத்த குப்பத்தைச் சேர்ந்த பெண் திவ்யா செவிலியர்
படிக்கப்போனாள் அம்மா மஞ்சுளா கூலிக்கு ஓடும் ஒற்றையடிப் பாதைகளன்றி உலகத்தின் ஓரு வழியும் அறியாதவள் மகளாவது கரையேறட்டுமென நட்டாற்றில் நாளும் கிடந்தாள்.
அப்புறம்...? ....அப்புறமென்ன!
காதல் வாழ்க !அம்மா ஒழிக !. காவல்நிலையத்தில்.லத்தி சாட்சியாய் வைத்து நடக்கும் வேட்டையைத் தடுக்கக் காவல்நிலையம் வந்தவரெல்லாம் கதறியழுத கதைதனை பிற்போக்குத்தனமென இச் ஜனங்கள் அடித்துச் சொல்கிறது. இது நடந்து தற்போது ஒரு வருடம்கூட ஆகவில்லை
நேற்று அக் குடும்பத்திற்கு ஒரு தொலைபேசி வந்தது... திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு காவல் நிலையத்திலிருந்து
திவ்யா பூச்சிமருந்து குடித்துச் செத்துப்போய்விட்டாள்.
இன்று திருவள்ளூரில் உடற்கூறாய்வு.
சந்தேக மரணமென எழுத முடியாதாம். காரணம்
’என்சாவுக்கு யாரும் காரணமல்ல
அப்பா அம்மவுக்கு சொல்லிவிடுங்க’
எனக் கடிதமும் இருக்கிறதாம்...
குரல் பதிவும் இருக்கிறதாம்.
மாரடித்து ஓலமிட்டால் கூட
சாதியவாதத்தில் வந்துவிடுமோயென
முந்தானை அழுத்தி
ஒப்பாரியை அடக்கியாயிற்று
போதுமா ? என் புது யுகமே
காரணமின்றி சாகப்பிறந்த இனமோ இது...
காரணமின்றித்தான் வாழ்கிறோமோ
குல தெய்வமே என் பச்சையம்மா
உனக்கு எல்லாம் தெரியும் தானே என அந்த ஏழைகள் குரல் அங்கு எடுபடவில்லை
பாவிகளுக்குத் தண்டனை கொடுக்கும்
பலமுனக்கு உள்ளதோ இல்லையோ
பாவியோரிடமிருந்து பெண்பிள்ளைகளைக்காக்க
வழியேனும் சொல்ல மாட்டாயா பராசக்தி என பாரதி வழியில் முறையிட மட்டுமே இவர்கள் பலம் உண்டு.. இந்த ஏழைக்கு நீதி ஏது
கருத்துகள்