இலட்சத்தீவு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக சோதனை நடத்திய சிபிஐ, இரண்டு குற்றவாளிகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது
கவரட்டியில் செயல்பட்டு வரும் லட்சத்தீவு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு ரூ.46,75,206 (உத்தேசமாக) இழப்பு ஏற்படுத்திய புகாரின் பேரில், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக தனித்தனியாக இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக, சிபிஐ மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேச லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 25.06.2022 அன்று, கவரட்டியில் உள்ள அந்த வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கூட்டாக திடீர் சோதனை மேற்கொண்டனர்.
லட்சத்தீவு கதர் கிராமத்தொழில் வாரியத்தில் பணியாற்றும் அடையாளம் தெரியாத ஊழியர்கள் சிலர், செல்வாக்கு மிக்க நபர்களுடன் சேர்ந்து வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்ததன் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதாகக் கூறி கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்ததால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களது மோசடியால், அந்த வாரியத்தின் பிற வளர்ச்சிப் பணிகளுக்கான நிதியை விடுவிக்க மறுத்ததால் அனைத்துப் பணிகளும் தடைபட்டதுடன் புதிய கடன்கள் வழங்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டது.
கருத்துகள்