குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெறும் ராம்நாத் கோவிந்திற்கு பிரியா விடை குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இன்று தில்லியில் உள்ள குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் மதிய விருந்து அளித்து கவுரவித்தார்.
திரு கோவிந்த் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்து தெரிவித்த திரு நாயுடு, குடியரசுத் தலைவர் தனது பரந்த பார்வை மற்றும் அன்பு நிறைந்த எளிமையின் மூலம் தாம் வகித்த பதவிக்கு பெருமை சேர்த்ததாக கூறினார். கடந்த ஐந்தாண்டுகளில் பல இனிமையான நினைவுகளை நினைவு கூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், நாட்டின் வளர்ச்சிக்காக குடியரசுத் தலைவர் கோவிந்துடன் இணைந்து பணியாற்றியது தமக்கு அற்புதமான அனுபவமாக இருந்தது என்றார்.குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் இரவு விருந்து அளித்தார்
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரவு விருந்தளித்தார்.
இது பற்றி பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:
“குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இரவு விருந்தளித்தேன். திருமதி திரௌபதி முர்மு, திரு வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
அடிமட்ட அளவில் சாதனை புரிந்த ஏராளமானோர், பத்ம விருது பெற்றோர், பழங்குடி சமூகத்தின் தலைவர்கள் உள்ளிட்டோரும் விருந்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.”
“குடியரசு தலைவர் திரு கோவிந்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியிலிருந்து மேலும் சில காட்சிகள்.”
கருத்துகள்