மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்கம் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்கு உள்ள சொகுசு விடுதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் காவல்துறை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 14 நாட்கள் நடைபெற உள்ளதில் 187 வெளிநாடுகளை சேர்ந்த 2,500 க்கும் அதிகமான செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில். போட்டிகள் நடைபெறும் அரங்கம் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்குவதற்குள்ள சொகுசு விடுதிகள் உள்பட மாமல்லபுரம் நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
அங்கு, போட்டிகள் நடந்து முடியும் வரையில் 4,000 காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். திருவாரூர், தஞ்சாவூர், சேலம், நாகர்கோயில், கோயமுத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் மாமல்லபுரத்துக்கு தற்போது வந்துள்ளனர். மேலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் வருகை தர உள்ளார்கள். பாதுகாப்புப் பணிக்காக வரும் காவலர்கள் தங்குவதற்காக, மாமல்லபுரத்தின் சுற்றுப்புறப் பகுதிகளில் 20 திருமண மண்டபங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இங்கு காவலர்களுக்கு உணவு தயாரிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போட்டிகள் நடைபெறும் அரங்க வளாகத்தின் அருகில் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வாகன ஓட்டுநர்கள், காவலர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்காக தற்காலிகக் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 10 நடமாடும் கழிவறை வசதி கொண்ட வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பாதுகாப்புப் பணியில் 400 க்கும் மேற்பட்ட பெண் காவலர்களும் ஈடுபட உள்ளனர்.
போட்டிகள் நடைபெறும் வளாகத்தில் போதுமான கழிவறைகள் உலகத்தரம் வாய்ந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. போட்டிகள் நடைபெறும் வளாகத்தில் 110 கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்பதும். மேலும் தற்போது இராமேஸ்வரம் அரிச்சல் முனையிலிருந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைக்க, கடல்மார்க்கமாக ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் பாம்பன் வந்தது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி பின்னர் மாணவ மாணவிகளால் பாம்பன் பாலம் வழியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்றது. அதோடு
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி.,
Chess Olympiad 2022 போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனைகள் வழங்கினார்.
கருத்துகள்