தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மொத்தம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் இல்லந்தோறும் மூவர்ண கொடி இயக்கத்தை நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் எடுத்துச் செல்கிறது
மொத்தம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் இல்லந்தோறும் மூவர்ண கொடி இயக்கத்தை நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனிடமும் எடுத்துச் செல்கிறது.
குறுகிய காலமான 10 நாட்களுக்குள் தபால் நிலையங்கள் மூலமும், இணையதளம் வாயிலாகவும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தேசிய கொடியை இந்தியா போஸ்ட் குடிமக்களுக்கு விற்பனை செய்துள்ளது.
ஒரு கொடியை மிகக்குறைந்த விலையான ரூ.25-க்கு விற்பனை செய்து வருகிறது. இணையதள விற்பனை மூலம் நாட்டிலுள்ள எந்தவொரு முகவரிக்கும் இக்கொடியை சேவைக் கட்டணம் இல்லாமல் கொண்டு சேர்க்கிறது.
4 லட்சத்து 20 ஆயிரம் தபால் ஊழியர்கள் நாடு முழுவதும் நகரங்கள், சிறிய நகரங்கள், கிராமங்கள், எல்லைப்பகுதி, இடதுசாரி தீவிரவாதம் மிகுந்த மாவட்டங்கள், மலைப்பகுதிகள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் இல்லந்தோறும் மூவர்ண கொடி உணர்வை உற்சாகத்துடன் எடுத்துச் சென்றுள்ளனர்.
தேசிய கொடி விற்பனை தபால் நிலையங்களில் ஆகஸ்ட் 15, 2022 வரை நடைபெறும். குடிமக்கள் தேசிய கொடியுடன் சுயபடம் எடுத்து www.harghartiranga.com என்ற இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.
கருத்துகள்