வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்“பொதுக்கொள்முதல் (இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்னுரிமை) ஆணை 2017” மாநாட்டை பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
பங்குதாரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, “பொதுக்கொள்முதல் (இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்னுரிமை) ஆணை 2017” மாநாட்டை, மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர்.பியூஷ் கோயல், புதுதில்லியிலுள்ள வனிஜ்யா பவனில் தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் உரையாற்றிய திரு.பியூஷ் கோயல், “2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான கூட்டு முயற்சியை எடுக்க வேண்டும் என்றும், இது சுதந்திர தின அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்த 5 உறுதி மொழிகளில் ஒன்றாகும் என்றும் கூறினார்.
பொதுக்கொள்முதலில் எங்கள் இலக்கு: நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் செழிப்பு என்று திரு.பியூஷ் கோயல் தெரிவித்தார். அரசின் மின்சந்தை செயல்பாட்டில், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசாங்கம் ஆர்வத்துடன் இருப்பதாகவும், இதனை மேலும் திறம்பட செயல்படுத்த தொழில்துறைகள் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்
கருத்துகள்