முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருள் ஐஐடி இணைந்து உருவாக்கியது

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்-உடன் இணைந்து, 2024-ஆம் ஆண்டு


ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.

ஸ்மார்ட்பாக்சர் (Smartboxer) என்ற குறைந்த செலவில் அமைக்கப்பட்ட பகுப்பாய்வுத் தளம், அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி குத்துச்சண்டை மதிப்பீடுக்கான நான்கு முக்கிய அம்சங்களைக் கணக்கிட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்ய உதவும்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) உடன் இணைந்து, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கச் செய்ய மேம்பட்ட குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி வருகின்றனர்.


விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் (Centre of Excellence for Sports Science and Analytics), பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது.

அணியக்கூடிய சென்சார்கள் மற்றும் வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி இண்டர்நெட்-ஆஃப்-திங்ஸ் (IoT) மூலம் பின்னூட்டம் மற்றும் செயல்திறன் மதிப்பீடுகளை இந்த பகுப்பாய்வுத் தளம் வழங்கும். இந்திய விளையாட்டு வீரர்களின் போட்டித் திறனை மேம்படுத்த இது உதவும்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) நிறுவனத்தில் ஸ்மார்ட்பாக்சர் பயன்படுத்தப்பட்டு, குத்துச்சண்டை வீரர்களின் செயல்திறன் ஆய்வு செய்யப்படும். ஐஐஎஸ்-ல் இருந்து பெறப்படும் பின்னூட்டத்தின் அடிப்படையில், ஸ்மார்ட்பாக்சர் பகுப்பாய்வுத் தளத்தில் மாற்றங்கள் இணைக்கப்படும். இதன்மூலம் பயிற்சியாளர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை திறம்படப் பயன்படுத்த முடியும்.

விளையாட்டுப் பொறியியல் (Sports Engineering) என்ற ஒப்பீட்டு அளவிலான புதிய துறைக்கு கணிதம், இயற்பியல், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட்- ஆஃப்-திங்ஸ் தொடர்புடன் அணியும் பொருட்கள் ஆகியவை இடைநிலைக் களமாக பயன்படுத்தப்படும். உடலியல், உயிர்இயக்கவியல் போன்ற விளையாட்டுடன் தொடர்பு உடையவற்றைப் புரிந்துகொள்ள விளையாட்டுப் பொறியியல் உதவிகரமாக இருக்கும். அத்துடன், விளையாடுவதில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்கவும், விளையாட்டு சாதனங்களை நன்கு வடிவமைக்கவும் இது உதவும்.

ஒலிம்பிக் பதக்கங்களை அதிகரித்தல் 2024 ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை அதிகரிக்க வேண்டும் என்ற லட்சிய இலக்கை எட்டிப் பிடிக்க, குறிப்பிட்ட சில முக்கிய விளையாட்டுகளை இந்திய அரசு பட்டியலிட்டு, அவற்றுக்கான முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வில்வித்தை, குத்துச்சண்டை, பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி, பளுதூக்குதல், சைக்கிள் பந்தயம், தடகளம் போன்ற விளையாட்டுகள் இதில் அடங்கும்.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு பத்தாண்டுகளோ, அதற்கும் அதிகமாகவோ தேவைப்படும். இந்த இலக்கை எட்டிப்பிடிக்க தொழில்நுட்ப அடிப்படையிலான வீரர்களின் செயல்திறன் மேம்பாட்டை ஏற்றுக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.

இதனை குறிக்கோளாகக் கொண்டுதான் ஸ்மார்ட்பாக்சர் மென்பொருளை ஐஐடி மெட்ராஸ் மேம்படுத்தி வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்த ஸ்மார்ட்பாக்சர் எவ்வாறு உதவும் என்பதை விளக்கிய ஐஐடி மெட்ராஸ்-ன் ரசாயனப் பொறியியல் துறை இணை ஆசிரியரும், விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையத்தின் தலைவருமான பேராசிரியர் ரங்கநாதன் ஸ்ரீனிவாசன் கூறும்போது, பயிற்சியாளருக்கும்,  உயர்நிலை விளையாட்டு வீரருக்கும் இடையே செயல்திறனை அடையாளம் காணவும், புரிந்து கொள்ளவும், ஆக்கபூர்வமாக மேம்படுத்தவும் தற்போது உருவாக்கப்பட்டு உள்ள தொழில்நுட்பம் பாலமாக செயல்படும். ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வெல்லும் இந்திய அரசின் லட்சிய இலக்கை அடைய ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்டு இருக்கும் பல்வேறு முன்முயற்சிகளில் ஸ்மார்ட்பாக்சரும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

இன்ஸ்பயர் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ் (IIS) குத்துச்சண்டைப் பிரிவில் இளைஞர் மேம்பாட்டுத் தலைவரான ஜான் வார்பர்டன் கூறும்போது, குத்துச் சண்டை வீரரின் செயல்திறனில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பகுப்பாய்வு செய்ய இந்த அமைப்புமுறை உதவியாக இருக்கும். வீரர்களின் பலம் என்னென்ன? செயல்பாட்டு நிலைகள், பஞ்ச்-கள், தற்காப்புத் திறமைகள் ஆகியவற்றில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய இடங்கள் எவை எவை? ஆகியவற்றை தொழில்நுட்பம், தந்திரங்கள் ஆகியவற்றின் அடிப்பயில் எங்களால் எடுத்துரைக்க முடியும். பயிற்சிப் புள்ளிகளைக் கண்டறியவும், வீரர்கள் குறித்த கூர்நோக்குகளை விளக்கவும் ஏதுவாக, தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான அமைப்பின் திறனைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன், என்றார்.

ஆய்வுமுறை இன்டர்நெட்-ஆஃப்-திங்ஸ் அடிப்படையிலான சென்சார்கள், வீடியோ கேமராக்களைப் பயன்படுத்தி, விளையாட்டு வீரரின் செயல்திறன் குறித்த பகுப்பாய்வுகளை வழங்க இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

1. பயன்படுத்தப்படும் இண்டர்நெட்-ஆப்-திங்ஸ் (IoT) அடிப்படையிலான தயாரிப்புகள்

பஞ்ச்-ன் வேகத்தை ஆய்வு செய்யும் வகையில் சென்சாருடன் கூடிய கையுறைகள்

தரை வினை விசையைப் (Ground Reaction Force) பதிவு செய்வதற்காக, வயர்லெஸ் ஃபுட் இன்சோலுடன் கூடிய அழுத்தமானி

விளையாட்டு வீரர்கள் உடலின் கீழ்பகுதியில் இயக்கத்தைப்

பதிவு செய்வதற்காக வயர்லெஸ் இ.எம்.ஜி. சென்சார்கள்

விளையாட்டு வீரர்கள் உடலின் மேல்பகுதியில் இயக்கத்தைப்

பதிவு செய்வதற்காக இயக்கசக்தி (Inertial) அளவீட்டு அலகு

2. குத்துச்சண்டை வளையத்தில் வைக்கப்படும் வீடியோ கேமராக்கள்

வீரரின் இடது, வலது கைகளை அடையாளம் காண்பதுடன், தாக்குதல்,

தற்காப்பு, பாசாங்கு ஆகியவற்றை வகைப்படுத்தும்

குத்துச்சண்டை வீரரின் குறிப்பிட்ட பாணி பற்றிய தகவல்களைக் கொண்டு

ஒட்டுமொத்த குத்துச்சண்டை பகுப்பாய்வுகளைப் பெறுவதற்காக சென்சார்கள்,

வீடியோ கேமராக்களில் இருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவுகள்

ஒருங்கிணைக்கப்படும். ஒலிம்பிக்கிற்கான குத்துச்சண்டைப் போட்டிகளின்போது இந்த பாணியைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும். பஞ்ச்-ன் தன்மை, தரம், ஈடுபாடுகளின் ஆதிக்கம், போட்டித்தன்மை போன்றவை இதில் அடங்கும்.

பகுப்பாய்வுத் தளத்தின் பிரத்யேக அம்சங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ்-ன் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் பாப்ஜி ஸ்ரீனிவாசன் கூறுகையில், வீடியோ தொகுப்புகள், பலவிதமான இண்டர்நெட்-

ஆப்-திங்ஸ் சாதனங்களில் இருந்து ஸ்மார்ட்பாக்சர் முறையில் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவ்வாறு பன்முகத் தரவுகளில் இருந்து பிரித்து  எடுக்கப்பட்ட பகுப்பாய்வுத் தகவல்கள், பயிற்சியாளர்களுக்கு உதவுவது மட்டுமின்றி, குத்துச்சண்டை சாம்பியன்களின் குறிப்பிட்ட பாணியை நடுவர்கள் மதிப்பீடு செய்யவும் உதவும்.

ஐஐஎஸ்-ல் சரிபார்க்கப்பட்ட பின், ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் ஐஐஎஸ்-உடன் இணைந்து ஸ்மார்ட்பாக்சர் காப்புரிமைக்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டு உள்ளனர்.

”இளைஞர்களுக்கான விளையாட்டுகளில் உயர் செயல்திறனுக்காக புதுமையான தொழில்நுட்ப மற்றும் விளையாட்டு அறிவியல் பயிற்சிகள்; என்ற தலைப்பில் இரண்டுநாள் மாநாடு நடைபெற்றது. இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒரு பிரிவான தேசிய விளையாட்டு அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையமும், ஐஐடி மெட்ராஸ்-ன் விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வு மையமும் இணைந்து கடந்த ஜூன் 2022 முதல்வாரத்தில் இந்த மாநாட்டை ஹரியானா மாநிலம் பஞ்சகுலாவில் நடத்தின.

விளையாட்டுத் தொழில்நுட்பம் மற்றும் உயர்செயல்திறன் கொண்ட விளையாட்டு சாதனங்கள் ஆகியவற்றில் இந்தியா தற்சார்பு அடைவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட, ஐஐடி மெட்ராஸ், இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா, டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் தொடர்பு), டாக்டர் நந்தன் சுதர்சனம், மேலாண்மை ஆய்வுகள் துறை இணைப் பேராசிரியர், பேராசிரியர் ஏ.என்.ராஜகோபால், மின்சாரப் பொறியியல் துறை, பேராசிரியர் ரங்கநாதன் ஸ்ரீனிவாசன், டாக்டர் பாப்ஜி ஸ்ரீனிவாசன் உட்பட ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்கள் பலர் மாநாட்டின் போது உரை நிகழ்த்தினார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன