ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான பிரபலமான நடிகர் என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை
தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகள் உமா மகேஸ்வரி. தற்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திலூள்ள வீட்டில் இன்று (ஆகஸ்ட்.,1 ஆம் தேதி) தூக்கிட்டுத் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் மீட்பு.
உமா மகேஸ்வரி சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததார் என்.டி.ராமாராவின் 12 பிள்ளைகளில் கடைசி மகள் தான் உமா மகேஸ்வரி. இவர் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் சகோதரியாவார். ஒன்றுபட்ட ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவியும் இவரது சகோதரியாவார். இறந்த உமா மகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறை, உடல் கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
கருத்துகள்