கனல் கண்ணன் சார்பில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோரிக்கையை நிராகரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், கனல் கண்ணன் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.கனல் கண்ணன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது கனல் கண்ணன் தரப்பிலிருந்து
இந்து முன்னணி சார்பாக 20 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர். இவர்களின் ஆலோசனைப்படி இன்று நீதிமன்றத்தில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.வழக்கில், ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் காவல்துறை தேடுதல் வேட்டை தீவிரமாகலாம் என்றும் எந்த நேரத்திலும் கனல் கண்ணன் கைது செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.
கருத்துகள்