இந்தியாவும், அமெரிக்காவும் பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விருப்பம் அமைச்சர் தகவல்
இந்தோ- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் பயனுள்ள விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அறிவிப்பு
இந்தோ- பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பின் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தின்போது வெளிப்படையான இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் பகிரப்பட்ட நலனுடன் ஒருமித்த, விதிகளின் அடிப்படையில், வெளிப்படைத் தன்னை வாய்ந்த நாடுகளின் குழுவை ஒன்றிணைக்க பயனுள்ள விவாதங்கள் நடைபெற்றதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
விவாதத்தின் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா தீவிரமாக கலந்து கொண்டதை சுட்டிக் காட்டிய அமைச்சர், விநியோக சங்கிலி, வரி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய நான்கில் மூன்று தூண்களின் வெளிப்பாடுகளில் இந்தியா திருப்தி தெரிவித்து அவற்றில் இணைந்ததாகத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல், தொழிலாளர், மின்னணு வர்த்தகம் மற்றும் பொது கொள்முதல் சம்பந்தமான உறுதிப்பாடுகள் தேவைப்படும் வர்த்தகத்தை பிரதானமாகக் கொண்ட ஒரு தூணின் திட்ட வடிவமைப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நியாயமான, வெளிப்படைத் தன்மை வாய்ந்த மற்றும் விதிகளின் அடிப்படையிலான வர்த்தகத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ள நாடுகளிடையே வர்த்தகத்திற்கான விதிகளை எதிர்காலத்தில் இந்த 14 நாடுகளின் குழுவினர் இணைந்து வடிவமைப்பார்கள் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற கூட்டத்திற்கு இடையே, ஆஸ்திரேலியா நாட்டின் வர்த்தக அமைச்சர் திரு டான் ஃபேரல் மற்றும் இந்தோனேசியாவின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் திரு ஏர்லங்கா ஹர்டார்டோ ஆகியோரை திரு பியூஷ் கோயல் சந்தித்து, இருநாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது பற்றி ஆலோசனை நடத்தினார் மேலும்
இந்தியாவும், அமெரிக்காவும் பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன: திரு பியூஷ் கோயல்
இந்தியாவும், அமெரிக்காவும் பொருளாதார மற்றும் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த விரும்புகின்றன என்று மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க-இந்திய ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் பேசினார்.
“இந்தியா தற்போது பல்வேறு வெளிநாடுகளுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுகிறது என்று கூறிய மத்திய அமைச்சர், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா போன்ற நாடுகளோடு இணைந்து செயலாற்றுவது புதிய வரலாற்றிற்கான பாதையை உருவாக்கும் என்றார்.
அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கும் போது, இந்தியா ஒரு வலிமையான, வளர்ந்த நாடாக உருப்பெற்றிருக்கும் என்ற நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு இது போன்ற நட்பு நாடுகளுடனான தொடர்புகள் முக்கிய பங்காற்றும் என்றார்.
கருத்துகள்