நாடாளுமன்ற வளாகத்திலுள்ள டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி முயற்சியில் வைக்கப்பட்டுள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் சிலைக்கு
மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இன்று (30.10.2022) நடைபெற்றது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு
ராஜுபிஸ்தா மற்றும் தில்லிவாழ் தமிழ் மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இந்திய தேசத்திற்குத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பைப் போற்றும் விதமாக அவருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அன்னாருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:
“பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன்.
அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.” என்றார். இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் உ.முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் சசிகலா நடராஜன் மதுரையிலிருந்து வேனில் புறப்பட்டு பசும்பொன் வந்தார். பகல் 1.27 மணிக்கு தேவர் நினைவிடம் வந்தவரை காவல்துறையினர்
மற்றும் தொண்டர்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேவர் நினைவிடம் முன் அமர்ந்து தியானம் செய்தார். தொடர்ந்து தேவர் வாழ்ந்த இல்லம், தேவரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை சசிகலா நடராஜன் பார்வையிட்டார்.முன்னதாக நினைவிடம் வந்த சசிகலாவை தேவர் நினைவிடப் பொறுப்பாளர்கள் காந்திமீனாள் நடராஜன், தங்கவேலு, பழனி ஆகியோர் வரவேற்றனர்.
கருத்துகள்