மோர்பி பாலம் சீரமைப்பு ஒப்பந்தம் பெற்ற ஓரேவா நிறுவனத் தொடர்புடைய ஒன்பது நபர்கள் கைது உயிரிழப்பு 141 ஆக அதிகரிப்பு
மோர்பி பாலம் சீரமைப்பு ஒப்பந்தம் பெற்ற ஓரேவா நிறுவனத் தொடர்புடைய ஒன்பது நபர்கள் கைது குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள மோர்பி நகரில், மசசூ ஆற்றில் சாத் பூஜை விழா நடத்தப்பட்டது.
ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட 150 ஆண்டுகள் மிகப்பழமையான இந்தத் தொங்கு பாலம் 233 மீட்டர் நீளம் கொண்டதாக. ஆற்றின் இரு பக்கத்தையும் இணைக்கும் வகையில் கேபிள்கள் மூலம் பாலம் கட்டப்பட்டிருந்தது.
சுற்றுலா ஸ்தலமாகவும் இந்தப் பாலம் திகழ்ந்தது. சமீபத்தில் இந்தப் பாலத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சீரமைக்க அந்தத் தனியார் நிறுவனம் சமீபத்தில் சீரமைப்புப் பணியை முடித்து அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி பாலத்தை திறந்தது முதல் கடந்த 5 நாட்களாக மீண்டும் மக்கள் செல்லத் தொடங்கினார்கள். ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தீபாவளிக்கு பிறகு வந்த விடுமுறை என்பதாலும் சாத் பூஜையின் முதல்நாள் என்பதாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் அங்கு திரண்ட நிலையில் கேபிள் பாலம் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு 141 ஆக அதிகரிப்பு
மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள வீரர்கள், மக்கள் இந்தத் துயர்மிகு சம்பவம் தொடர்பான தகவல்
குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் கடந்த 1880-ஆம் ஆண்டு (140 ஆண்டுகளுக்கு முன்) ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. பாலம் பழுதடைந்ததை அடுத்து, கடந்த ஏழு மாதங்களாக பாலம் மூடப்பட்டு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரூ.இரண்டு கோடியில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, குஜராத்தி புத்தாண்டான அக்டோபர் 26 ஆம் தேதி பாலம் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது.
பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடுவதற்கு முன் பெறப்பட வேண்டிய தகுதிச் சான்று (Fitness Certificate) பெறப்படவில்லை என்று நகர் மன்றத் தலைவர் சந்திப்சின் ஜாலா தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலம் 125 பேரை மட்டுமே தாங்கக் கூடியதாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தப் பாலத்தில் சம்பவத்தின் போது குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என சுமார் 500 பேர் இருந்துள்ளனர். இவர்கள் பலரும் வட இந்தியாவின் புகழ்பெற்ற பூஜையான சாத் பூஜையை பாலத்தின் மீது இருந்தவாறு செய்துள்ளனர்.
பாலத்தின் மீது ஏறிய இளைஞர்கள் சிலர், வேண்டுமென்றே பாலத்தை உலுக்கி சேட்டையில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் கோஸ்வாமி எனற நபர் தெரிவித்துள்ளார்.பாலத்தின் மீது ஏற வேண்டாம் என முடிவெடுத்து தான் திரும்பிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். திரும்புவதற்கு முன்னர் அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம், இது பற்றிக் கூறியதாகவும், ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாதென்று சொல்லிவிட்டு டிக்கெட் விற்பதிலேயே கவனமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலம் அறுந்து விழுந்ததையடுத்து அதன் மீதிருந்த பெரும்பாலானோர் ஒருவர் மீது ஒருவராக தண்ணீரில் விழுந்துள்ளனர். நீச்சல் தெரிந்தவர்கள் தப்பியுள்ளனர். சிலர், நீச்சல் தெரியாமல் தவித்தவர்களை காப்பாற்றி உள்ளனர். குழந்தைகள் பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தான் இருந்தார். உடனடியாக அவர் முதல்வர் பூபேந்திர படேலைத் தொடர்பு கொண்டு, மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு உத்தரவிட்டார். மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து, காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்தும் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். சில இளைஞர்கள் தொங்கு பாலத்தில் வேகமாக குதித்ததாகவும், ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் எடையை தாங்க முடியாமல் அந்த பாலம் கேபிள்கள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. தொங்கு பாலத்தில் நின்று கொண்டிருந்த மக்களும் மசசூ ஆற்று தண்ணீருக்குள் விழுந்தனர்.
ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மக்களால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியவில்லை. பலர் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். இன்று காலை வரை நடந்த கணக்கெடுப்பின்படி தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.
பாலத்தில் இருந்து விழுந்தவர்களில் மேலும் பலரை காணவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரவே வாய்ப்பு . இன்று காலை முதல் 2-வது நாளாக மீட்பு பணிகள் நடந்து வருகிற நிலையில், தொங்கு பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும் காவலதுறை அதிகாரிகள் குஜராத் மாநில அரசு தனியார் நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்து இருந்தது.
கருத்துகள்