முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசின் உள்துறை உத்தரவு.
ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டு நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக ராஜீவ் காந்தி அறக்கட்டளை, மற்றும் ராஜீவ் காந்தி தொண்டு நிறு வனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய மூன்று அறக்கட்டளைகளில் சட்டவிதிமுறை மீறல்கள் எதுவும் நடந்துள்ளதா
என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்த நிலையில், வெளிநாட்டிலிருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அறக்கட்டளை 1991-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை உடல்நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு உள்ளிட்டவற்றில் 2009-ஆம் ஆண்டு வரை செயல்பட்ட. அறக்கட்டளையின் தலைவராக சோனியா காந்தி, மற்றும் உறுப்பினர்களாகமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி , மாண்டேக் சிங் அலுவாலியா, சுமன் துபே மற்றும் அசோக் கங்குலி ஆகியோர் உள்ளனர். ராஜீவ்காந்தி தொண்டு நிறுவனம் 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நாட்டின் பின்தங்கிய மக்களின், குறிப்பாக கிராமப்புற ஏழைகளின் வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டது. ராஜீவ்காந்தி தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர்களாக ராகுல் காந்தி, அசோக் கங்குலி, பன்சி மேத்தா மற்றும் தீப் ஜோஷி ஆகியோர் உள்ளனர். பிரதமர் நிவாரண நிதி ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும். மோசடிப் பேர்வழி தொழிலதிபர் மெகுல் சோக்சியிடம் இருந்து நிதி பெற்றதாகவும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறி யிருந்த நிலையில் இந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்