முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளில் அவருக்கு அரசு மரியாதை

சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளில் அவருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் மரியாதை


ஒற்றுமையின் சின்னமாக விளங்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளில், அவரை நினைவு கூர்ந்து, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம் என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள், ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுகுறித்து டாக்டர் எல். முருகன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’பல சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரே இந்தியாவாக அமைய வழிவகுத்த பாரத ரத்னா  #சர்தார்வல்லபாய்பட்டேல் ஜெயந்தியில் ஒற்றுமைக்கான சின்னமாய் விளங்கும் அவரை நினைவு கூர்ந்து, பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் ஆட்சியில் வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதியேற்போம்’’.இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு புது தில்லியில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு புது தில்லியில் குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் மைதானத்தில் ஒற்றுமைக்கான ஓட்டத்தை உள்துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர், வெளியுறவு இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, உள்துறை இணை அமைச்சர் திரு நிஷித் பிரமானிக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை திரு அமித் ஷா செய்து வைத்தார்.



குஜராத்தின் மோர்பியில் நேற்று பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாடப்படுவதால் இன்றைய நிகழ்ச்சி சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்டு, அதன் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு தலைவரின் பிறந்தநாளில் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியமான செய்தியை முன்னெடுத்துச் செல்கிறோம் என்று அவர் கூறினார். சர்தார் வல்லபாய் படேலின் பெயரைச் சொன்னவுடனேயே இன்றைய

ஐக்கிய இந்தியாவின் வரைபடம் நினைவுக்கு வருகிறது என்றும், சர்தார் சாஹேப் இல்லையென்றால், இன்றைய பரந்த, உறுதியான, சக்தி வாய்ந்த இந்தியா சாத்தியமாகியிருக்காது என்றும் திரு ஷா கூறினார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இந்திய யூனியனை உருவாக்குவதுதான் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய பிரச்சனை என்றும், அதை உருவாக்குவதில் நாட்டின் முதல் உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான சர்தார் சாஹேப் முக்கியப் பங்காற்றினார் என்றும் திரு அமித் ஷா கூறினார். தனது திறமையான மற்றும் தனித்துவமான அரசியல் புத்திசாலித்தனத்தால் முழு நாட்டையும் ஒருங்கிணைத்தவர் பட்டேல் என்று அவர் கூறினார். அந்த நேரத்தில் கூட தேசவிரோத சக்திகள் நாட்டைப் பிளவுபடுத்துவதில் ஈடுபட்ட போதிலும், சர்தார் சாஹிப்பின் முயற்சியால்தான், இந்தியாவின் ஒருங்கிணைந்த வரைபடத்தை நாம் இன்று பார்க்கிறோம் என்று  கூறினார்.

2047 ஆம் ஆண்டில் இந்தியா எந்த இடத்தில் இருக்கும் என்று கூட்டாக உறுதிமொழி எடுப்பதை இலக்காகக் கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இன்று இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.

2047ல் சர்தார் சாகேப்பின் கற்பனை இந்தியாவை உருவாக்குவதில் 130 கோடி மக்கள் மற்றும் நாட்டின் மாநிலங்களின் கூட்டுத் தீர்மானம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு பல மைல்கற்களை எட்டியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக, அடிமைத்தனத்தின் அனைத்து வெளிப்பாடுகளிலிருந்தும் விடுபட்டு சுயமரியாதை, வளமான, வலிமையான மற்றும் பாதுகாப்பான இந்தியாவைக் கட்டியெழுப்புவதை நோக்கி நாடு நகர்ந்துள்ளது என்றார் அவர்.

நாட்டை ஒன்றிணைக்கும் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கியதன் மூலம், நாடுகளின் கூட்டுறவில் இந்தியா இன்று பெருமையுடன் நிற்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பல ஆண்டுகளாக சர்தார் படேலின் பாரம்பரியத்தை புறக்கணிக்க முயற்சித்த போதிலும், அவர் தனது குணங்களால் அழியாமல் இருந்தார் என்றும், இன்று சர்தார் படேல் தேசத்தின் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார் என்றும் கூறிய அவர், சர்தார் வல்லபாய்

படேலின் பாதையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு இன்று நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றார். இரும்பு மனிதர் சர்தார் பட்டேலின் மகத்தான செயல்களை நினைவுகூர்ந்த திரு அமித் ஷா, சர்தார் படேல் காட்டிய பாதையை பின்பற்றி 2047க்குள் அவரது கனவை நிறைவேற்ற நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,