அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு-2022ல்
பங்கேற்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி, 2022, அக்டோபர் 31 அன்று ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) செல்கிறார்
ஐக்கிய அரபு எமிரேட்சின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் மேன்மைதங்கிய சுஹைல் முகமது ஃபராஜ் அல் மஸ்ரூயி, தொழில்துறை மற்றும் நவீனத் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி மேன்மைதங்கிய டாக்டர். சுல்தான் அகமது அல் ஜாபர் ஆகியோர் அழைப்பின் பேரில் அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு-2022ல் பங்கேற்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி, 2022, அக்டோபர் 31 அன்று ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) செல்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, அபுதாபி சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு-2022-ன் தொடக்க விழாவில் அமைச்சர் சிறப்புரையாற்றுவார்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமது துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோரை மாண்புமிகு அமைச்சர் பூரி சந்தித்துப் பேசுவார்.
கருத்துகள்