அவசரத் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய என்டிஎம்ஏ குழு கல்பாக்கம் வருகை
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் திரு ராஜேந்திர சிங் தலைமையிலான குழு,
மூத்த ஆலோசகர் திரு எஸ்.கே.கோஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு ஏ.ராகுல் நாத், உதவி ஆட்சியர் திருமதி.ஆர்.வி.ஷஜீவனா, இணை இயக்குநர் (சுகாதார சேவைகள்) டாக்டர் பிரியா ராஜ் ஆகியோருடனும், கமாண்டன்ட் திரு டி.அருண் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவுடனும் , கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் உள்ள கல்பாக்கம் அணுசக்தி துறை மையத்திற்குச் சென்று, அவசரகால தயார்நிலைத் திட்டத்தை ஆய்வு செய்தார். ஒருங்கிணைந்த கதிர்வீச்சு கண்காணிப்பு வசதி , கட்டுப்பாட்டு அறை, டர்பைன் உருவாக்கும் வசதி, புகுஷிமாவுக்குப் பின் அமைக்கப்பட்ட ஹூக்-அப் புள்ளிகள் மற்றும் மின்நிலையத்தில் உள்ள மற்ற அணுசக்தி வசதிகளை ஒரு பகுதியாக அவர்கள் பார்வையிட்டனர்.
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பி.வெங்கட்ராமன், ஐ.ஆர்.எம்.எஃப்-ல் உள்ள வசதிகளை விரிவாக விளக்கினார். மின்நிலைய இயக்குநர் ஸ்ரீ சுதிர் பி.ஷெல்கே, அவரது குழுவினருடன் பாதுகாப்பு அம்சங்கள், தயார்நிலை, சிஎஸ்ஆர் நடவடிக்கைகள் உள்ளிட்ட பொது விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.
என்டிஎம்ஏ குழு, அணுசக்தி அவசரகால தயார்நிலையின் உறுதியான தன்மை குறித்து திருப்தி தெரிவித்தது. கல்பாக்கம் பகுதிக்கு முதல்முறையாக வருகை தந்து, அணுசக்தி வல்லுனர்களின் சிறப்பான, பாராட்டத்தக்க குழுப்பணியைக் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொழில்முறையின் தரம், போற்றத்தக்க ஒருங்கிணைப்பு முயற்சிகள், மிக உயர்ந்த ஒழுங்குமுறை, உள்ளூர் மக்கள் மற்றும் நிர்வாகத்துடனான தொடர்பு ஆகியவற்றால் என்டிஎம்ஏ குழ
ஈர்க்கப்பட்டது. முழு திருப்தியை வெளிப்படுத்திய அக்குழு, இதே போன்ற செயல்பாட்டை எதிர்காலத்திலும் சிறப்பாக தொடர வேண்டும் என்று வாழ்த்தியது.
கருத்துகள்