தமிழ்நாட்டில் புதிய பங்களிப்பு பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சிபிஎஸ் ஒழிப்பு அமைப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.
விரைவில் இது குறித்து பரிசீலிக்கப்படும் என, தமிழக அரசு அண்மையில் உறுதி அளித்ததுடன் இந்தக் குழு ஊழியர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்று வல்லுனர் குழு ஒன்று அதன் அறிக்கையை, முதல்வரிடம் வழங்கியது, குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஓய்வூதியம் பெறுபவர்களின் விருப்பத்தின் பேரில், அவர்களின் ஓய்வூதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். ஓய்வூதியதாரர் இறக்கும் பட்சத்தில், இந்தத் தொகை ஓய்வூதியதாரர் நியமிக்கும் நியமனதாரருக்கோ அல்லது அவரின் துணைவர் துணைவியருக்கோ வழங்கப்படும். ஒரு வேளை ஓய்வூதியதாரர்கள், யாரையும் நியமிக்காத நிலையில் முழுத் தொகையும் அவர்களின் வாரிசுகளுக்கு சமமாகப் பிரித்து வழங்கப்படும். மேலும், ஓய்வூதியதாரர் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த முழு பலனும் கிடைக்கும் என அரசு உறுதியளித்துள்ளது.
கருத்துகள்