திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை- மருங்காபுரி தாலுகாவில் வட்டாட்சியர்
லட்சுமி துவரங்குறிச்சி அருகில் காரைப்பட்டி அடுத்த மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (வயது 59), தனது 13 ஏக்கர் புஞ்சைத் தோட்டத்திற்குச் செல்லும் மின்சார வயர்களில் புங்கமரம் உரசியதால் அந்தக் கிளைகளை மின்சார வாரியத்திற்குத் தெரிவிக்காமல் வெட்டியுள்ளார். அதை தலையாரி மூலம் அறிந்த மருங்காபுரி தாசில்தார் லட்சுமி (வயது 56)
மரங்களை வெட்டுவதற்கு முன் அனுமதி இல்லை என்பதால் அது குறித்து நடவடிக்கை எடுக்காமலிருக்க தனக்கு லஞ்சமாக ரூபாய்.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது. லஞ்சம் கொடுக்க பேரம் பேசி சுப்பிரமணியன் ரூபாய்.10 ஆயிரம் மட்டும் கொடுப்பதாகக் கூறிய நிலையில், அவர். இந்த லஞ்சப் பெருச்சாளி தாசில்தாரை சிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.
அதையடுத்து அவர்களது ஆலோசனையில் பேரில் பினாப்தலின் இரசாயனப் பொடி தேய்த்த ரூ.10 ஆயிரத்தை நேற்று மாலை மருங்காபுரி தாசில்தார் லட்சுமியிடம்
விவசாயி சுப்பிரமணி அரசு தரப்பில் சாட்சி முன்னிலையில் கொடுத்தபோது
அதைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் லட்சுமியை மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் கைது செய்தனர். பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய கையுடன் லஞ்ச ஒழிப்புத் துறையில் பிடிபட்டார்.மேலும் வட்டாச்சியர் லட்சுமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு பின்னர்
மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு சிறைக்கு அனுப்பப்பட்டார்.இதில் பொது நீதி யாதெனில் சரஸ்வதி பூஜை நாளில் லஞ்ச லட்சுமி கைதானது அலுவலகத்திலும், மக்கள் மத்தியிலும் பரபரப்புடன் பேசப்படுகிறது.
கருத்துகள்