மதுரையில் உருவாகும் எய்ம்ஸ் மருத்துவமனைக்குத் தலைவரை நியமித்து மத்திய அரசு உத்தரவு.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் தமிழ் நாடு வந்து ஐந்து இடங்களை ஆய்வு செய்து விட்டுச் சென்ற பின்னர் மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்தியக் குழு ஒப்புதல் வழங்கியது. அதன் படி தமிழ்நாடு அரசு விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததையடுத்து, 1,264 கோடி ரூபாய் செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், அதன் பின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவு பணிகளில் வேகமில்லை.
பெரும் போராட்டத்துக்குப் பின் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார். அதன் பிறகும் பணிகள் முடங்கின. தற்போது வரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சமீபத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி, மதுரை எய்ம்ஸ் பணிகள் எப்போது தொடங்கும் எனக் கேட்கப்பட்டதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் எப்போது தொடங்கும் என்ற தகவல் இல்லை என்றும் கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டில் முடிவடையும் என்றும் பதில் கூறியது
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவரை தற்போது நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரையில் உள்ள வி.என் நரம்பியல் சிறப்பு மருத்துவமனையின் தலைவராக உள்ள நாகராஜன் வெங்கட்ராமனை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமித்து மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கருத்துகள்