இந்திய வருமான வரி்ச் சட்டம் 139 ன் படி நடப்பு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல்
செய்வதற்கான தேதி இன்னும் நான்கு நாட்களுக்குள், அதாவது அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதையடுத்து இந்தக் காலக்கெடுவை நவம்பர் ஏழாம் ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ள www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை , வருமான வரி செலுத்தும் அனைத்து பயனர்களும் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டுமென இந்த வாரிய செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது
கருத்துகள்