தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியால், இன்று முதல் 4- ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் , மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.
திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர். திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை மற்றும் மிகக் கனமழைக்கான வாய்ப்பு.
சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நாகபட்டிணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், செய்யூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்கிறது. சென்னை வில்லிவாக்கத்தில் 24 மணி நேரத்தில் 10.2 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் கடந்த 24 மணி நேரத்தில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளதென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
கருத்துகள்