சிஓபி மாநாட்டின் 27 வது அமர்வில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்,
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
COP 27 இல் இந்திய அரங்கை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் திறந்து வைத்தார்
எகிப்தில் உள்ள) ஷர்ம் எல்-ஷேக்கின் சிஓபி மாநாட்டின் 27 வது அமர்வில் ( சிஓபி27) மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர், திரு பூபேந்தர் யாதவ், இன்று இந்தியா அரங்கை திறந்து வைத்தார். இந்த மாநாடு (சிஓபி27) நவம்பர் 6 ந்தேதி முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளை இந்தியா அரங்குக்கு வரவேற்ற திரு யாதவ், சிக்கலான பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி எளிய தீர்வை வழங்கியுள்ளார் என்று கூறினார். பருவ நிலை நடவடிக்கை அடிமட்ட, தனிநபர் மட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்று இந்தியா நம்புவதாகவும், எனவே வாழ்க்கை - சூழலுக்கான வாழ்க்கை முறை என்ற கருப்பொருளுடன் இந்தியா அரங்கை வடிவமைத்ததாகவும் அவர் கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில், நேர்மறையான பருவநிலை மாற்றத் தீர்வுகளை நோக்கிப் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த சிஓபி இளம் அறிஞர்களை திரு யாதவ் பாராட்டினார். பல்வேறு ஆடியோ காட்சிகள், லோகோ, 3டி மாதிரிகள், அமைப்பு, அலங்காரம் மற்றும் பல நிகழ்வுகள் மூலம் லைஃப் செய்தியை அனுப்பும் வகையில் அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
"சிஓபியின் காலம் முழுவதும், இந்தியா அரங்கு , எளிய வாழ்க்கை முறை மற்றும் இயற்கையில் நிலையான தனிப்பட்ட நடைமுறைகள் அன்னை பூமியைப் பாதுகாக்க உதவும் என்பதை பிரதிநிதிகளுக்கு நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன்" என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு யாதவ் கூறினார்.
“பருவநிலை நிதி தொடர்பான விவாதங்களில் கணிசமான முன்னேற்றத்தை இந்தியா எதிர்பார்க்கிறது. புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும், தொழில்நுட்ப பரிமாற்றங்களை எளிதாக்கும் புதிய ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்,” என்று திரு. யாதவ் கூறினார்.
"மிஷன் லைஃப் இந்த பூமியின் பாதுகாப்பிற்காக மக்களின் அதிகாரங்களை இணைத்து, அதை சிறந்த முறையில் பயன்படுத்த அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. மிஷன் லைஃப் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை ஜனநாயகப் பூர்வமானதாக ஆக்குகிறது, அதில் ஒவ்வொருவரும் அவரவர் திறனுக்கு ஏற்ப பங்களிக்க முடியும். சிறிய முயற்சிகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மிஷன் லைஃப் நம்புகிறது” என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியிருந்தார். .
பல நூற்றாண்டுகளாக, இந்திய நாகரிகங்கள் நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வழிவகுத்துள்ளன என்பதே அரங்கின் வடிவமைப்பில் உள்ள வழிகாட்டும் சிந்தனையாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்கள் இந்திய கலாச்சாரத்தில் குறியிடப்பட்டுள்ளன. இயற்கை சூழலுக்கு மரியாதை காட்டும் பல நடைமுறைகள் அன்றாட வாழ்வில் வேரூன்றியுள்ளன. காலநிலை மாற்றத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் அவை விலைமதிப்பற்றவை என்பதை நிரூபிக்க முடியும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்ட நிலைத்தன்மை பற்றிய இந்த ஆழமான அறிவு, இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியை உலகிற்கு வாழ்க்கை மந்திரத்தை வழங்க வழிவகுத்தது - இது கிரகத்தின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளாவிய காலநிலை நெருக்கடியைக் கையாள்வதில் லைஃப் இயக்கம் இந்தியாவின் பங்களிப்பாகும். லைஃப் இயக்கம், நவீன உலகில் நிலையான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் நபர்களை 'கோள் சார்பு மக்களாக' மாற்ற முயல்கிறது. இங்கிலாந்தில் இருந்து சிஓபி தலைமைப் பதவியை எகிப்து ஏற்றுக்கொண்ட விழாவில் திரு பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார்,
கருத்துகள்