இராணுவ வீரர்களின் மனைவியரின்
குறைகளைக் களைய ஏதுவாக, ஒற்றைச் சாளர வசதியை இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது
ராணுவ வீரர்களின் மனைவியரின் குறைகளைத் தீர்க்க ஏதுவாக, ஒற்றைச் சாளர முறையிலான வீராங்கனை சேவா கேந்திரா (VSK) என்ற வசதியை, இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை டெல்லி ராணுவ கண்டோன்மெட்டில் உள்ள இந்திய ராணுவத்தின் படைவீரர்கள் இயக்குநரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணுவத்தினரின் மனைவியர் நல சங்கத்தின் தலைவர் தொடங்கிவைத்தார்.
இந்திய ராணுவ படைவீரர்கள் இணையதளமான www.indianamyveteran.gov.in மூலம் வீராங்கனை சேவா கேந்திரா என்ற இந்த சேவையைப் பெறமுடியும். இதில் பதிவாகும் புகார்களைக் காண்காணித்து, அதன் தற்போதைய நிலவரம் குறித்தத் தகவல்கள் உடனுக்குடன்
விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இதைத்தவிர, வீராங்கனை சேவா கேந்திரா சேவையை, தொலைபேசி, குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப், தபால், மின்னஞ்சல் மூலமும் பெற முடியும்.
அதேபோல், ராணுவத்தைச் சாராத, ராஷ்டிரிய சைனீக் வாரியம் (RSB), கேந்திரீய சைனீக் வாரியம் (KSB), ஜில்லா சைனீக் வாரியம் (ZSB) ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள், மின்னஞ்சல் மூலம் இந்த சேவையைப் பெற இயலும்.
இந்திய ராணுவ படைவீரர்கள் இயக்குநரகம் (DIAV), 104 கவால்ரி சாலை, மியூடே லைன்ஸ், டெல்லி கண்டோன்மென்ட்-110010 என்ற முகவரியில் தபால் மூலம் புகார் அளிக்கலாம்.
நம்முடைய பிரச்னைகளுக்கு நாமே தீர்வு காண்பது என்பதே இந்த வீராங்கனை சேவா கேந்திராவின் உன்னத நோக்கம். இதற்காக, வீராங்கனை சேவா கேந்திரா பணியாளராக ராணுவ வீரர்களின் கைம்பெண் மனைவியர் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
கருத்துகள்