கோவா சர்வதேச திரைப்பட விழா ஏற்பாடுகள்: மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வு
இம்மாதம் 20 முதல் 28-ந் தேதி வரை கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆயத்தப் பணிகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச திரைப்படங்களுக்கு ஒரு பொதுவான தளத்தை வழங்குவதற்கும், திரைப்படக் கலையின் சிறப்பை முன்வைப்பதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் ஏதுவாக கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழா மிகச் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய இந்த நிகழ்வுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து தங்களது மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். கோவா மாநிலத்திற்கே உரிய மகிழ்வையும், கொண்டாட்ட உணர்வையும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஊடுபரவலாக ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா, இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகை தரும் பங்கேற்பாளர்கள் மற்றும் திரைக்கலை முக்கியஸ்தர்கள் ஆகியோருக்கும் தங்கள் வருகை உவகை அளிப்பதாக அமையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் எவ்விதமான குறைவுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டுமென்று வலியுறுத்தினார்.
இந்த திரைப்பட விழாவிற்கான இணையப்பக்கம் மற்றும் கைபேசி செயலி ஆகியவற்றை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அவர் தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக பங்கேற்பாளர்கள் திரைப்பட விழாவின் மிகச் சிறந்த அனுபவத்தை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.
தேசிய திரைப்பட அபிவிருத்திக் கழக நிர்வாக இயக்குனர் ரவீந்திர பாக்கர், இம்முறை இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவிலான திரைக்கலை வல்லுனர்கள் திரைப்பட விழாவில் பங்கேற்க இருப்பதாக கூறினார்.
முன்னதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், பல்வேறு நிகழ்வுகள் நடைபெற இருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடக்க நிகழ்விற்கு முன்னதாகவே திரைப்பட விழாவின் அனைத்து நிகழ்வுகளும் செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தங்கமயில் விருது பெறும் ஆவலுடன் 15 திரைப்படங்கள் உள்ளன.
கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெற உள்ள 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தங்கமயில் விருதுபெறும் ஆவலுடன் 15 திரைப்படங்கள் போட்டியில் இறங்குகின்றன. திரைப்படத் துறையில் அழகுணர்ச்சி மற்றும் அரசியலில் வளர்ந்து வரும் போக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், 12 சர்வதேச திரைப்படங்களும், 3 இந்திய திரைப்படங்களும் இந்த போட்டியில் இடம்பெறும்.
முதன் முறையாக தங்கமயில் விருது வழங்கப்பட்ட இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இருந்து இந்த விருது ஆசியாவின் திரைப்பட விருதுகளில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் விருதாக உள்ளது. இந்த ஆண்டு போட்டியின் போது, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் கடுமையான பணியை இஸ்ரேல் எழுத்தாளரும், திரைப்பட இயக்குனருமான நாடவ் லேப்பிட், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஜின்கோ கோட்டோ, பிரான்ஸ் திரைப்பட தொகுப்பாளர் பாஸ்கல் சவான்ஸ், பிரான்ஸ் ஆவணப்பட தாயரிப்பாளர், திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளரான சேவியர் ஆங்குலோ பார்ட்டன், இந்தியாவின் திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.
இந்த போட்டியில், 1990 வாக்கில் காஷ்மீரிலிருந்து வெளியேறிய காஷ்மீரி பண்டிட்களை மையப்படுத்திய இந்திய திரைப்படமான காஷ்மீர் ஃபைல்ஸ், இந்தியாவின் 3 திரைப்படங்களில் ஒன்றாக இடம்பெறுகின்றது. அகால மரணமடைந்த தனது பெற்றொர்களின் உண்மை தன்மை குறித்து கண்டறிவதற்காக வீட்டை விட்டு வெளியேறும் கிருஷ்ணா என்ற இளம் கல்லூரி மாணவரை மையப்படுத்திய கதையாக இந்த திரைப்படம் உள்ளது.
பிரபல திரைப்பட இயக்குனர் சத்ய ஜித்ரேயின் கதாபாத்திரமான தாரிணி குரோவை அடிப்படையாக கொண்டது ஸ்டோரி டெல்லர் என்ற ஆனந்த் மகாதேவனின் திரைப்படம். இது தங்கமயில் போட்டிப்பிரிவில் இடம்பெற உள்ளது. தாரிணி குரோ தனது பணி ஓய்வுக்கு பின், ஒரு கதை சொல்லியாக மாறிய வித்தியாசமான சூழ்நிலையை அவர் தாமே உணர்ந்தது பற்றிய கதையம்சத்தை கொண்டது இந்த திரைப்படம். இது பூசன் சர்வதேச திரைப்பட விழா 2022ல் கிம் ஜி- சியோக் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படமாகும்.
ராசி அழகப்பனின் ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்ட, இயக்குனர் கமலக்கண்ணனின் குரங்கு பெடல் இந்த போட்டிப்பிரிவில் இடம்பெறுகிறது. தனது தந்தை தனக்கு கற்றுதர முடியாமல் போன மிதிவண்டி சவாரியை கற்றுக்கொள்ள விரும்புகின்ற ஒரு பள்ளி மாணவனின் கதையாகும் இது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் 2012ல் வெளியான மதுபானக் கடை திரைப்படத்தின் மூலம் நன்கு அறியப்பட்டவர் ஆவார்.
இவை தவிர, 12 சர்வதேச திரைப்படங்களும் தங்கமயில் விருதுபெற போட்டியிடுகின்றன.53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் திகில் திரைப்படங்கள்
அமானுஷ்யம், திகில் திரைப்படங்களுக்கு உலகளவில் எப்போதுமே வரவேற்பு இருந்து வருகிறது. பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் திரைப்படங்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் நிச்சயம் பஞ்சமிருக்காது. இது போன்ற திரைப்படங்களுக்குக் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பைக் கருத்தில் கொண்டு, வரும் நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை கோவா மாநிலம் பனாஜியில் நடைபெறவிருக்கும் 53-வது இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் “பயங்கரமான கனவுகள்” என்ற சிறப்பு பிரிவில் அண்மையில் வெளிவந்த அமானுஷ்ய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
ஸ்லோவாக்யா நாட்டின் ‘நைட் சைரன்’ (Night Siren), பெரு நாட்டின் ‘ஹ்யுசேரா’ (Huesera), ஸ்பெயினின் ‘வீனஸ்’ (Venus), ஃபின்லாந்து நாட்டின் ‘ஹேட்சிங்’ (Hatching) ஆகிய திரைப்படங்கள் இந்தத் தொகுப்பில் திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்