இன்று காலை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் நடைபெறுகிற கடைசிக் கூட்டத்தொடராகும்.
இது மொத்தம் 23 நாட்கள் நடக்கும். 17 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு நடக்கும் கூட்டத் தொடர் 29 ஆம் தேதி முடிவுக்கு வரும் தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியரசு திட்டமிட்டுள்ளது.நிர்வாகத்தை பலப்படுத்துதல், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், பொறுப்புணர்வை அதிகரித்தல் மற்றும் பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் தேர்தல் செயல்முறையை சீர்திருத்துதல் ஆகிய நோக்கங்களுடன் தற்போதுள்ள சட்டங்களை இணைத்து, பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா அறிமுகப்படுத்தப்படுகிற நிலையில்,
2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஆறாண்டுகளில் (நடப்பாண்டின் அக்டோபர் 31 ஆம் தேதி வரை) நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் மீது 56 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளதாகவும் அதில் 22 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்துள்ளதாகவும் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் இன்று நாடாளுமன்ற மக்களவையில் அறிக்கையை தாக்கல் செய்ததில் அதிகபட்சமாக ஆந்திரப் பிரதேசத்தில் 10 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குகள் உள்ளன. கேரளா, மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 6 பேர் மீதும் தமிழ்நாட்டில் 4 பேர் மீதும் சத்தீஸ்காரில் 1, மேற்கு வங்காளத்தில் 5, டெல்லியில் 3, பீகாரில் 3, மேகாலயாவில் 1, மணிப்பூரில் 3, உத்தரகாண்டில் 1, அருணாச்சலப் பிரதேசத்தில் 5, ஜம்மு காஷ்மீரில் 2, மத்தியப் பிரதேசத்தில் 2, மஹாராஷ்ரத்தில்1, லட்சத்தீவில் 1 என மொத்தம் 56 பேர் மீது வழக்குகள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்