'மூளைக்கு வல்லாரை,முடி வளர நீலி நெல்லி'.. என்பது சித்தர்கள் வாக்கு ..வழுக்கைத் தலையில் முடி முளைப்பதென்பது பாலைவனத்தில் நெல் சாகுபடி செய்வதென்பது எப்படிச் சாத்தியமில்லையோ, அப்படியே,
பலரும் பல ஆயில் விற்பனை செய்யும் நிறுவனங்களின் விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுவது இயல்பு தான், நாமறிந்தவரை யில் முடி வளரும் ஆயில்களை விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்திவரும் அனைத்து உரிமையாளர்களும் வழுக்கைத்தலையர்கள் தான்,,!
என்பதை உணர வேண்டும். (குறிப்பாக: ரோமா மற்றும் அஸ்வினி நிறுவனங்கள் உள்பட ) அப்படியிருக்க அவர்களுக்கே முளைக்காத முடி தங்களுடைய தலையில் முளைக்குமென நம்பி வாங்கும் நபர்களுக்கு முடி மட்டுமே இல்லை என்பதை விட, மூளையும் சிந்திக்க வில்லை என்பதற்கான காரணம் நம்மைச் சிந்திக்க விடாமல் செய்யும் விளம்பர யுத்தி தான் .. அதை ஆதரங்களுடன் இங்கு விரிவாகப் பார்க்கலாம். ரோமா விளம்பர அட்டைப் படத்தில் விளம்பர மாடல் அதன் உரிமையாளரே உள்ளார்.அது 1991 ஆம் ஆண்டு முதல் வந்த விளம்பரம். முடி இல்லாமல் முடியுடன் என இரண்டு படங்களில் சும்மா தகதகவென மின்னுவார் பாருங்கள் அது போலவே நாமறிந்த வரை சுமார் 5 நிறுவனங்கள் அடங்கும் (பெயர் வேண்டாம்) நீங்களும் கண்டு பிடிக்க முடியும், இப்படி பல வியாபார யுத்தியில் வழுக்கைத் தலையர்கள் ஏமாற்றப்படும் நிலையில் அதற்குத் தீர்வு பூக்கள் மட்டும் தான் என்பது சித்தர்கள் கூறிய வழிமுறைகள் உண்டு.
முடி உதிர்வென்பது எல்லா வயதினருக்குமுள்ள பொதுவான ஒரு பிரச்சனைகள் தான், பள்ளிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்தப் பிரச்சனைகளுண்டு. ஆண், பெண் பேதமின்றி அனைவருக்கும் போதுமான சத்தில்லாத உணவுப்பழக்கங்கள், முறையற்ற பழக்கவழக்கங்களுடன் புவி வெப்பமயமாதலும் முடி உதிர்வுக்குக் காரணம். புவி வெப்பமயமாதல் காரணமாக உடல் எளிதாக உஷ்ணமடைவதால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது முடிதான். உடல் உஷ்ணத்தால் முடிஉதிர்வு மட்டுமல்லாமல், முடி வறட்சி, பொடுகு, புண்கள், வியர்வைத் திட்டுகளும் ஏற்படுகின்றன. புவி வெப்பமயமாதலால் ஏற்படும் முடி உதிர்வை உணவுப் பழக்கங்கள் மற்றும் பிற பழக்கவழக்கங்களால் மாற்றலாம்.
காலையில் நீண்டநேரம் படுக்கையிலிருப்பது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். சூரியோதயத்திற்குள் கண்விழிப்பது உடலில் குளிர்ச்சியைத் தக்கவைக்கும். போதுமான தூக்கமில்லாததும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். தற்போதய இளைஞர்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பதைத் தவிர்த்து பெரும்பாலும் பிரில்கிரீம் போன்ற ஜெல்களையே பயன்படுத்துகின்றனர்.அதிலிருக்கும் இரசாயனங்கள் முடியைப் பலவீனப்படுத்துவதுடன் முடி உதிர்வுக்கும் காரணமாகும். செயற்கை மினரல் எண்ணெய்களும் முடி உதிர்வை அதிகரிக்கும்.
தலையிலிருக்கும் மயிர்க்கால்களை வறண்டுபோகச் செய்யும். இரசாயனங்கள் நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவை தலையிலுள்ள செல்களை அழிப்பதுடன் முடி உதிர்வையும் ஏற்படுத்தும், வயது முதிர்ச்சியால் முடி உதிர்வதைத் தடுக்கயியலாது, ஆண், பெண் இருபாலருக்கும் வயதாக வயதாக முடி உதிர்தல் மற்றும் முடி வலிமையிழத்தல் இயல்பானது, முப்பது வயதிற்கு மேல் முடி வளர்ச்சியும், அடர்த்தியும் குறையத் தொடங்கும், முடி நன்றாகவும் ஆரோக்கியமாகவும் வளருவதற்கு நியூட்ரிஷன்கள் தேவை. திடீரென்று எடை குறைதல், இரும்பு ச்சத்து குறைதல், முறைப்படி உணவுக் கட்டுப்பாடும், பின்பற்றாததாலோ முடி உதிர்தல் பிரச்னை வரும். அதிகளவு மன அழுத்தம் உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் காணப்படுகிறது. வேலைப்பளு, மனம் அமைதியின்மை, எரிச்சலடையும் மனப்பான்மை போன்ற காரணங்களாலும் முடி உதிரும். அடிக்கடி முடியை இறுக்கமாக கட்டி வைத்தால் முடி உதிர்தல் பிரச்னைக்கு வழிவகுக்கும்.
அதேபோல் முடியை சரியாக பராமரிக்காமல் கண்டபடி வைத்திருப்பது, அதாவது (நடிகைகள் பின்பற்றும் லூஸ் கேர் அதாவது தமிழில் கூறினால் தலைவிரிகோலம்) முடியின் வேர் பாதிக்கப்பட்டிருப்பது மற்றும் அதிக அளவு மன அழுத்தம் உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை காணப்படுகிறது. வேலைப்பளு, மனம் அமைதியின்மை, எரிச்சலடையும் மனப்பான்மை போன்ற காரணங்களாலும் முடி உதிர்தல் ஏற்படும். முக்கியக் காரணமாகும் இதில் வேடிக்கை என்னவென்றால் அஸ்வினி ஹேர் ஆயில் வாங்கித் தலையில் தேய்த்தால்.
முடி உதிர்வது நின்று விடுமாம்.
கரு கருவென தலைமுடி அடர்த்தியாக வளரும் என்ற நம்பிக்கை இன்று நம்மில் பலரிடம் உள்ளது.
அஸ்வினி ஹேர் ஆயில் நிறுவனம் 1994 ஆம் ஆண்டு தற்போதய தெலுங்கானா மாநிலத்தில் ஆந்திரப் பிரதேசமாக இருந்த போது
அஸ்வினி சுப்பாராவ் என்பவரால் துவங்கப்பட்டு.
இன்று இந்தியாவின் முன்னணி நிறுவனமாகவே உள்ளது.
அஸ்வினி ஹேர் ஆயில் நிறுவனத்தின் உரிமையாளர்
அஸ்வினி சுப்பாராவ் தலை என்னவோ வழுக்கை தான்
இவர் விற்பனை செய்யும் எண்ணெய் மற்றவர்கள் தலையில் மட்டுமே மயிர் வளரும் அதிசயம் தான். இப்படி பல நகைச்சுவை உண்டு. உண்மையிலேயே பூக்கள் மட்டுமே முடிவளரும் காரணி அதாவது மஞ்சள் அரளிப் பூ, சங்குப் பூ,ரோஜா பூ,செம்பருத்திப் பூ,சீமைச் சாமந்திபூ என பல வகையான மருத்துவப் பயன்களை தனக்குள்ளே வைத்திருக்கிறது இந்த அற்புத பூக்கள். இதிலுள்ள Apigenin என்ற நிறமி நரை முடிகளிலிருந்து உங்களைக் காக்கும். இயற்கையாகவே இது முடி உடைவதை தடுக்கிறது. சீமைச் சாமந்தியில் தேனீர் போட்டுக் குடித்தால் பல தலை முடி சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மேலும், தலையிலுள்ள அதிகப் பொடுகை இந்த டீ நீக்குகிறது.முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியிலிருந்து வளரக்கூடியது. தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக நூறு முடிகள் உதிர்வது இயற்கை.
முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. முடியின் வளர்ச்சி மூன்று பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம்.ஒரு முடி தினமும் சராசரியாக அரை மில்லிமீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிப் பருவம் 3 முதல் 7 வருடங்கள் வரை தான் நீடிக்கும். இதைத் தீர்மானிப்பது, பரம்பரையில் வரும் மரபணுக்கள். அடுத்தது ‘காட்டாஜன்’ (Catagen) என்று ஒரு பருவம்.
இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இந்தப் பருவம் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும். சிறு வயது பற்கள் போல தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும்; வழுக்கை விழும்.வயது, பரம்பரை, ஆன்ட்ரோஜன் ஹார்மோன், இந்த மூன்றும் தான் வழுக்கைக்கான முக்கியக் காரணங்கள். உடல் வளர்ச்சியின் நியதிப்படி, வயதாக வயதாக செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதைத் தாமதப்படுத்தும். இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்று விடும். முதுமையில் வழுக்கை விழுவதும் இப்படித்தான்.
வழுக்கை உள்ள பரம்பரையில் பிறந்தவர்களுக்கு அவர்களின் மரபணுக்களில் எந்த வயதில் வழுக்கை விழ வேண்டும் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும். அந்த வயதில் வழுக்கை விழுவது நிச்சயம். இதை யரும் எந்த ஆயிலும் மாற்ற முடியாது.
மற்றொரு காரணம் . டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்பது ஒரு ஆன்ட்ரோஜன் ஹார்மோன். இது அளவாகச் சுரந்தால் முடி சரியாக வளரும்; அதிகமாகச் சுரந்தால் முடி கொட்டும். இது முடிக்குழிகளைச் சுருக்கிவிடுகிறது. முடியின் வளர்ச்சிப் பருவத்தைக் குறைத்து விடுகிறது. இதனால், தான் வழுக்கை விழுகிறது.
கருத்துகள்