புதுதில்லியில் பழங்குடியினர் அதிகாரம் அளித்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் திரு தர்மேந்திர பிரதான் உரையாடினார்
நாட்டில் பழங்குடியினர் அதிகாரம் பெறும் வகையிலும்,அவர்களின் வாழ்வாதாரம் உயரும் வகையிலும், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இது குறித்து புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழ ங்குடியினர் நலனுக்கான நிதி 2014-15 ஆம் ஆண்டு ரூ.19,437 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2022-23ஆம் ஆண்டில் ரூ.87,585 கோடியாக அதிகரிக்கப்பட்டதாக கூறினார். பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்துக்கான நிதி 2014-15ஆம் ஆண்டில் ரூ.3,832 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2022-23ஆம் ஆண்டு ரூ.8,407 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
கல்வி குறித்து பேசிய அவர், உள்ளூர் மொழி மற்றும் தாய்மொழியில் கல்வி என்பது தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய நோக்கம் என்றும் இதனால், பழங்குடியின மக்கள் பயனடைவார்கள் என்றும் கூறினார். பழங்குடியினருக்கான ஏகலைவ மாதிரி உண்டு,உறைவிட பள்ளிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
கருத்துகள்