திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார் . அவருக்கு வயது 67.
இயக்குநர் விசு மூலம் திரைப்பட நடிகராக அறிமுகமானவர் நடிகர் சிவ நாராயணமூர்த்தி. முதல் திரைப்படமாக பூந்தோட்டம் அமைந்தாலும் காலம்சென்ற நடிகர் விவேக் மற்றும் நடிகர் வடிவேல் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்டார். பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றி நடித்த சிவ நாராயணமூர்த்தி
தமிழக முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் , அஜித், விஜய் உள்ளிட்ட பலருடன். 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவரது ஊரான. பட்டுக்கோட்டையில் ஜமீன்தாராகவே வாழ்ந்து வசித்து வந்த நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட இன்றிரவு 8.30 மணியளவில் காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர்
இவருக்கு 2 ஆண் மக்கள் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் பிள்ளை (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி புஷ்பவல்லி. அவரது இறுதிச் சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனிடையே, ஊர் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் திரையுலக வட்டாரங்களில் அவரின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்ப நேரு காலக் காங்கிரஸ் கட்சியில் பாரம்பரியத்திலிருந்து வந்தவர் இவரது தந்தை. நடிகர் ரஜினிகாந்த்மற்றும் சிவாஜிகணேசன் உடன் இவர் படையப்பா படப்பிடிப்பு கர்நாடகா மாநிலம் பெங்களூர் அரண்மனையில் நடந்து கொண்டிருந்தபோது அங்கு சிறப்பு விருந்தினராகத் தங்கி இருந்த முன்னாள் குடியரசுத் தலைவரான பட்டுக்கோட்டை இராஜாமடம் சேர்ந்த ஆர் .வெங்கட்ராமனவர்கள் இவரை அடையாளம் கண்டு அவர் அறைக்கு அழைத்து உன் தந்தை தான் எனது அரசியலுக்கு முன்னோடி எனக் கூறி உபசரித்து அனுப்பி வைத்தாராம்.
அவர் காட்சி முடியும் வரை நடிகர் திலகம் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அதன் பிறகு இவரை மிகவும் மதித்து நடந்து கொண்டார்களென்பதும்
இதை ஒரு முறை சன் டிவியில் நடந்த செய்தியாளர் நேர்காணலில் அவர் கூறியயள்ளார். திருமணமான மகள் போட்ட சிவில் வழக்கு காரணமாகப் பாதிப்பு அவருக்கு இருந்தன அகமுடையார் தேவர் சமூகத்தவர் அப் பகுதி ஜமீனாக அவர் குடும்பம் பட்டுக்கோட்டை பகுதியில் நன்கு அறியப்படும் நிலை.
அவருடைய ஆத்மா இறைவன் திருவடியில் அமைதி பெறட்டும். பட்டுக்கோட்டை மண்ணிலிருந்து திரைக்கு சென்றவர்களில் தனக்கென ஒரு முத்திரை பதித்த திரைக்கலைஞர் சிவ நாராயணமூர்த்தி
கருத்துகள்