ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் திருமகன் ஈவேரா (வயது 46) காலமானார்.
இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனாவார். பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரின்
கொள்ளுப்பேரனாவார் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று மாரடைப்பால் காலமானார்.
நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமகன் ஈவேரா இன்று மருத்துவமனையில் காலமானார்.
.திருமகன் ஈவெராவின் திடீர் மரணம் காரணமாக ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
கருத்துகள்