நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சுயநினைவின்றி உள்ளதாக மருத்துவர்களின் தகவல். பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில்
விரைவில் நலம்பெற வேண்டுகிறோம்.கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகிலுள்ள மணக்காவிளை எனும் ஊரைச் சேர்ந்த தற்போது திமுக பேச்சாளர்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத் மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக சில காலமிருந்தார். வைகோவுடன் கருத்து வேறுபாடு காரணமாக விலகி 2012 ஆம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா இருந்த போது அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவருக்கு கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா நடராஜன் ஆதரவு நிலைப்பாட்டில் தினகரன் அமமுகவை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை எனக் கூறி கட்சியில் சேரவில்லை.
பின்னர் அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்து விட்ட நாஞ்சில் சம்பத், சமீப காலமாக திமுக நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வந்தார். சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதோடு இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கெடுத்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருத்துகள்