தேசிய போர் நினைவுச்சின்னதின் 4வது ஆண்டு விழாவில் மாவீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி
தேசிய போர் நினைவுச்சின்னம் இன்று நான்காவது ஆண்டைக் கொண்டாடுகிறது. இந்நாளைக் குறிக்கும் வகையில், முப்படைத் தலைமை தளபதி ஏர் மார்ஷல் பி.ஆர். கிருஷ்ணா, துணை ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமார், கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக் , விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி ஆகியோர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து, துணிச்சலான வீரர்களின் தியாகங்களுக்குச் சான்றாக விளங்கும் இந்த நினைவிடம், பிப்ரவரி 25, 2019 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தேசபக்தி, தைரியம், தியாகம் மற்றும் கடமையில் அர்ப்பணிப்பு உணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் அதிகபட்ச மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த முயற்சிகள் ஊக்கமளிக்கும் வரவேற்பை பெற்றுள்ளது.
மறைந்த மாவீரர்களுக்கு மக்கள் டிஜிட்டல் அஞ்சலி செலுத்துவதற்காக நினைவிடத்திற்கு அருகில் திரைகள் நிறுவப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 25 முதல் 24.94 லட்சம் பார்வையாளர்களால் 12.76 லட்சம் டிஜிட்டல் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் ஆயுதப் படைகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்காகவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்கவும், பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல், 1,460 பள்ளிகளில், 1.80 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், நினைவிடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
ஐகானிக் தளங்களில் ஒன்றான இந்த நினைவுச்சின்னத்தில் நித்திய சுடர் உள்ளது, இது ஒரு சிப்பாய் கடமையின் போது செய்த மிக உயர்ந்த தியாகத்தை எடுத்துக்காட்டுகிறது.
கருத்துகள்