வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகப் பதவி ஏற்றார்,
அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதை விசாரித்து மனுக்களை தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 5 கூடுதல் நீதிபதிகள் நியமனம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
இந்திய தலைமை நீதிபதியுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு பின்வரும் வழக்கறிஞர்களை சென்னை, அலகாபாத் மற்றும் கர்நாடக மாநில உயர்நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக நியமிப்பதாக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
இதன்படி, வழக்கறிஞர்களான லெஷ்மண சந்திர விக்டோரியா கௌரி, பிள்ளைப்பாக்கம் பஹுகுடும்பி பாலாஜி, கந்தசாமி குழந்தைவேலு ராமகிருஷ்ணன், நீதித்துறை அதிகாரிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், சையத் கொமார் ஹசன் ரிஸ்வி, மனீஷ்குமார் நிகம், அனிஷ் குமார் குப்தா, நந்த் பிரபா சுக்லா, ஷிடிஜி ஷைலேந்திரா, வினோத் திவாகர் ஆகியோர் அலகாபாத் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வழக்கறிஞர்கள் விஜய்குமார் அடகௌடா பாட்டில், ராஜேஷ் ராய் கலங்கலா ஆகியோர் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சமீபத்தில் 5 புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் அதேபோல வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்கள் இன்று காலை பதவியேற்றனர் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இவர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் இந்த 5 பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நீதிபதிகள் எண்ணிக்கை 57ஆக உயர்ந்துள்ளது. வழக்குகள் நிலுவையில் இருப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கூடுதல் நீதிபதிகள் நியமனம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இதில் வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதைப் பல மூத்த வழக்கறிஞர்கள் எதிர்த்தனர்.
இது தொடர்பாகப் பல மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் கொலிஜியத்திற்கும் கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் நீதிபதியாக பதவிஏற்றார்.
கருத்துகள்