சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் கேரளாவில் பிரதமரின் ஜன்விகாஸ் காரியாக்ரம் திட்டம்
பிரதமரின் ஜன் விகாஸ் காரியாக்ரம் திட்டத்தின் (பிஎம்ஜெவிகே) கீழ் கேரளாவில் 19 சமூக உள்கட்டமைப்புக்கானத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 2020-21-ம் நிதியாண்டு முதல் 2022-23-ம் நிதியாண்டு வரை ஒட்டுமொத்தமாக 19 திட்டங்களைச் செயல்படுத்த ரூ.129.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவைப் பொறுத்தவரை ஜன் விகாஸ் காரியாக்ரம் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் அதாவது, 2019-20ம் நிதியாண்டு முதல் 2021-22-ம் நிதியாண்டு வரை மொத்தம் 41 திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதில் இதுவரை 4 திட்டங்களுக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதாகவும், 14 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், எஞ்சிய 23 திட்டங்களுக்கான பணிகள் இன்னும்தொடங்கபடவில்லை என கேரளா அரசு அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஸூபின் இரானி இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை தெரிவித்தார்.
கருத்துகள்