முன்னால் சட்டப்பேரவை உறுப்பினரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவருமான கூத்தகுடி ச.சண்முகம் அவர்களின் நினைவு தினம் நேற்று பல அரசியல் கட்சியின் பிரமுகர்கள் நினைவஞ்சலியை பதிவு செய்தனர்.
மிதிவண்டியில் இருவர் செல்வதற்கு வரி விதிப்புக் கூடாதென சட்டமன்றத்தில் பேசி அரசாணை பெற்றுத்தந்தவர்,
ஏழை கூலி்த் தொழிலாளர்களின் வாழ்வாதரமான குளிர்பாணக் கட்டிகள் தயாரிப்பிற்கு வரிவிலக்கு பெற்றுத்தந்தவர்,
இராமநாதபுரம் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க அன்றய முதல்வர் எம்ஜிஆரிடம் எடுத்துச்
சொல்லி. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மற்றும் விருதுநகர் காமராஜர் மாவட்டங்கள் உருவாகக் காரணமானவர்..
மாமன்னர் மருதுபாண்டியர்கள் வாரிசு கண்டறியும் குழுவின் மூலம் பலரும் வாரிசு உரிமை பெறக் காரணமாணவர்,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக திறம்படச் செயலாற்றியவர்..
ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களால் சுதந்திர காலத்தில் அச்சத்தோடு பார்க்கப்பட்டு வீரராக அழைக்கப்பட்டவர்.
ஆகஸ்ட்மாதம் 15 ஆம் தேதியில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்., கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவராய் வாழ்ந்த சேதுபதி நாட்டு மண்ணின் மைந்தர். முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கூத்தகுடி ச.சண்முகம் அவர்களின் நினைவு தினம் நேற்று நடைபெற்றதில் அவர்களின் புகழ் போற்றப்பட்டது.
கருத்துகள்