மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்துடன் (SETS) புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்துடன் (SETS) புதுவைப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தகவல் பாதுகாப்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகத்தின் (PSA) முன்முயற்சியான மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்துடன் (SETS) புதுவை பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது. SETS என்பது இந்தியாவின் தகவல் பாதுகாப்புத் துறையில் முதன்மையான R&D நிறுவனம்.
புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், பேராசிரியர். ரஜீஷ் பூடானி, பதிவாளர்(i/c) மற்றும் டாக்டர். என். சுப்ரமணியன், சென்னை, SETS, நிர்வாக இயக்குனர் கையெழுத்திட்டனர்.
இயக்குநர் (கல்வி) பேராசிரியர் கே.தரணிக்கரசு மற்றும் புல முதன்மையர் (சர்வதேச உறவுகள்) பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜு ஆகியோர் இந்நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசினர்.
SETS ஐச் சேர்ந்த ஐந்து விஞ்ஞானிகள் குழு (டாக்டர். என். சுப்ரமணியன் - நிர்வாக இயக்குனர், டாக்டர். பிரேம் லக்ஷ்மன் தாஸ் - மூத்த விஞ்ஞானி, டாக்டர். நடராஜன் - விஞ்ஞானி, டாக்டர். ரேஷ்மி - விஞ்ஞானி, டாக்டர். திருப்பதி - விஞ்ஞானி), மற்றும் புதுவை பல்கலைக்கழக புல முதன்மையர்கள் , துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் SETS விஞ்ஞானிகள் மற்றும் புதுவை பல்கலைக்கழக ஆசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே பின்வருவனவற்றை செயல்படுத்தும்:
குவாண்டம் பாதுகாப்பு உள்ளிட்ட தகவல் பாதுகாப்பின் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பப் பகுதிகளில் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் அதனை சார்ந்த கல்விப் படிப்புகளில் வேலை.
திறன் மேம்பாடு, ஆலோசனை சேவைகள், கார்ப்பரேட் பயிற்சியை அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற பொது அல்லது தனியார் துறை நிறுவனங்களுக்கு தகவல் பாதுகாப்புத் துறைகளில் வழங்குவதில் இணைந்து பணியாற்றுவது.
கூட்டு நிகழ்வுகள் / பட்டறைகள் / பயிற்சி திட்டங்களை நடத்துதல்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் புல முதன்மையர் பேராசிரியர் டி.சித்ரலேகா ஒருங்கிணைத்தார். புதுவை பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவ சத்யா, புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சிக்கு நன்றியுரை வழங்கினார்.
கருத்துகள்