ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளை ரத்து செய்வதற்கான வரைவை (2023) வெளியிட்டுள்ளது ட்ராய்
தொலைத்தொடர்புத்துறை சம்பந்தப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கலாம்
ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகளை ரத்து செய்வதற்கான வரைவை (2023) இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்டுள்ளது. அதோடு, தொலைத்தொடர்புத் துறை சம்பந்தப்பட்டவர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் எனவும் ட்ராய் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2001-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதியன்று வெளியிடப்பட்ட குறைந்த அளவிலான இணைப்புக் கொண்ட இணையதள பயன்பாட்டு சேவை, தொலைபேசி சேவையின் தரம் குறித்த விதிமுறைகளை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. இந்த ஒழுங்குமுறை விதிகள் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், விஎஸ்என்எல் போன்ற அடிப்படை சேவை செயல்பாட்டாளர்கள் மற்றும் இணையதள சேவை வழங்குபவருக்கு பொருந்தும்.
www.trai.gov.in என்ற இணையதளத்தில் ஒழுங்குமுறை விதிகளை அறிந்துகொள்ளலாம். அதன் கருத்துக்களை ஏப்ரல் 17, 2023-க்குள் தெரிவிக்கலாம்.
கருத்துகள்