திறமைவாய்ந்த சிறுமி ஷார்மிலியின் வீடியோவை பிரதமர் பகிர்ந்துள்ளார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளம் திறமையாளரான ஷார்மிலியின் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அவரது இசைப்புலமையை வெகுவாகப் பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :-
" இந்த வீடியோ அனைவரது முகத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும். அசாத்தியத்திறமை மற்றும் படைப்பாற்றல். ஷார்மிலிக்கு வாழ்த்துகள்"
கருத்துகள்