சோலார் மின்சக்தி மூலம் உகாண்டாவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கி உதவியால்
உகாண்டாவுடனான நட்புறவு அதிகரித்திருப்பதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
உகாண்டாவுடனான நட்புறவு அதிகரித்திருப்பதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியால் நிதியுதவி செய்யப்பட்டு, சோலார் மின்சக்தி மூலம் உகாண்டாவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் பற்றிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெயசங்கரின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இந்தத் திட்டம் உகாண்டாவுடனான நட்புறவை அதிகரிப்பதோடு நீடிக்கவல்ல வளர்ச்சியையும் மேம்படுத்தும்”
கருத்துகள்