முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விரைவாக விரிவுபடுத்தப்படும் 5ஜி சேவை

விரைவாக விரிவுபடுத்தப்படும் 5ஜி சேவை


2 லட்சமாவது 5ஜி கோபுரம் கங்கோத்ரியில் தொடங்கிவைக்கப்பட்டது

அனைத்து 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் 5ஜி சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

சர்தாமுக்கு கண்ணாடியிழை தகவல் தொடர்பு அர்ப்பணிப்பு

சர்தாம் எனப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்திரி ஆகிய நான்கு இடங்களும் தற்போது 5ஜி இணைப்பு மற்றும் கண்ணாடியிழை கேபிள் இணைப்பைப் பெற்றுள்ளன


அதிவேக இணையதள பேண்ட்வித் சர்தாம் தலங்களுக்கு வரும் யாத்திரீகர்களுக்கு தடையற்ற தகவல் தொடர்பு இணைப்பை வழங்குகின்றன

யாத்திரை பகுதி மற்றும் ஆலய வளாகத்திற்குள் குரல் மற்றும் வீடியோ தகவல் தொடர்பு இணைப்பு நல்லத் தரத்தில் இருப்பதை மக்கள் உணரமுடியும்

கங்காரியாவில் இருந்து ஹேம்குந்த் சாஹிப் வரையிலான 6 கிலோ மீட்டர் நீள மலையேற்றப் பாதையிலும் தற்போது மொபைல் போன் இணைப்பு சேவை வழங்கப்படுகிறது


இந்தியாவின் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்ப சேவையில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வருகிறது

உத்தராகண்ட் மாநிலம் மனாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி பேசுகையில், “21ம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு  இரண்டு முக்கிய தூண்கள் உள்ளன. முதலாவதாக, நமது பாரம்பரியத்தின் பெருமை மற்றும் இரண்டாவதாக வளர்ச்சி. உத்தராகண்ட் மாநிலத்தின் அனைத்து முயற்சிகளும் இந்த இரண்டு தூண்களையும் வலுப்படுத்துகின்றன” என்று கூறியிருந்தார்.

பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்தும் வகையில், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ரயில்வே, அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி ஆகியோர் கங்கோத்ரியில் 2,00,000-வது 5ஜி தொலைத் தொடர்பு கோபுர தளத்தை தொடங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார், தொடங்கப்பட்ட 8 மாதங்களுக்குள், 700 மாவட்டங்களை உள்ளடக்கிய 2,00,000 தொலைத்தொடர்பு கோபுர தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 5ஜி சேவை நெட்வொர்க் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் அதிவேக 5ஜி விரிவாக்க நடவடிக்கையாகும்.

5ஜி சேவை கைப்பேசி இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. சார்தாம் யாத்திரை பாதையில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு கோபுரங்களும் இப்போது 5ஜி மூலம் இணைக்கப்பட்டுள்ளன.

மிக உயர்ந்த அலைவரிசை கொண்ட  ஃபைபர் இணைப்பு காரணமாக, இந்த இடங்களுக்குச் செல்லும் யாத்ரீகர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும். அரசின் மக்களை மையமாகக் கொண்ட முயற்சியின் ஒரு நடவடிக்கை இதுவாகும்.  இந்த தலங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் வரும் நிலையில், கோயில் வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், யாத்திரைப் பாதையிலும் குரல் மற்றும் வீடியோ அழைப்புத் தரம் இனி நன்றாக இருக்கும். மேலும், கங்காரியாவிலிருந்து ஹேம்குண்ட் சாஹிப் வரையிலான 6 கிலோ மீட்டர் நீள மலையேற்றப் பாதையும் மொபைல் சேவைகள் மூலம் இணைக்கப்படுகிறது.

இதற்கான நிகழ்ச்சியில் உரையாற்றிய, அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது என்றார். இந்தியாவின் 5ஜி விரிவாக்கம் உலகின் அதிவேக விரிவாக்கங்களில் ஒன்றாகும். 2,00,000-ஆவது 5ஜி கோபுர தளம் கங்கோத்ரி, சார்தாமில் தொடங்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய நடவடிக்கை  என்றும் அவர் கூறினார். 6ஜி தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இந்தியா  முன்னிலை வகிக்க வேண்டும் என்ற  பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தில் 100க்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார். இது நாட்டின் பொறியாளர்கள் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களின் உயர்ந்த திறமையை எடுத்துக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இந்தியாவின் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டி வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். உத்தராகண்ட் மாநிலத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை மிக விரைவாக அமைக்க உதவியதற்காகவும்,  விரைவாக அனுமதிகளை வழங்கியதற்காகவும்  உத்தராகண்ட் மாநில அரசுக்கு  திரு அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்தார்.

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு  புஷ்கர் சிங் தாமி பேசுகையில், மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை இயக்குவதற்கு  ஆதரவு வழங்கிய  நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார். சார்தாமில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு இணைப்பு யாத்திரீகர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் பிறருடன் தடையற்ற முறையில் தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள உதவும் என்று அவர் கூறினார்.

21ம் நூற்றாண்டின் 3வது பத்தாம் ஆண்டு உத்தராகண்டின் பத்தாண்டுகளாக இருக்கும் என்று பிரதமர் ஏற்கனவே கூறியதை அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார். மலைப்பகுதிகளில் அதிவேக இணையதள இணைப்புக் கட்டமைப்பு, பேரிடர் மேலாண்மை நடைமுறைகள்  ஆகியவற்றையும் இந்த வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தி தரும் என்று அவர் குறிப்பிட்டார். உலகில் நடைபெறும்  டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில்தான்  நடைபெறுகிறது  என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா 5ஜியில் உலகளாவிய தரத்தை நிர்ணயித்து வருவதாகவும், மொபைல் போன்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாகவும் அவர் கூறினார். கடைசி நிலையிலும் சிறந்த இணைப்பை  வழங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் முழுவீச்சில்  செயல்படுகின்றன என்று திரு புஷ்கர் சிங் தாமி குறிப்பிட்டு தமது உரையை நிறைவு செய்தார் .

ஒவ்வொரு தொலைதூர கிராமத்திற்கும் நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் உலகத்தரம் வாய்ந்த தொலைதை் தொடர்பு இணைப்பை வழங்க மத்திய அரசு அயராது பாடுபட்டு வருகிறது.

அந்த வகையில், உத்தராகண்டில் தொலைத்தொடர்பு இணைப்புக்கான அரசின் பல்வேறு முயற்சிகளில் சில:

இந்த மாநிலத்தின் தொலைதூர பகுதிகள் கூட, மிக வலுவான மற்றும் குறைந்த செலவிலான தகவல் தொடர்பு சேவையைக் கொண்டுள்ளன. இந்த சேவைகளை சிறந்த வேகத்தில் வழங்க, தொலைத் தொடர்பு அமைச்சகம் பல திட்டங்களையும், புதிய தொழில்நுட்பங்களையும் செயல்படுத்துகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் தற்போதுள்ள முக்கிய தொலைத்தொடர்பு  சேவைகள் பின்வருமாறு:

· கிராமப்புற மக்களில் 92.5 சதவீதம் பேர் 4ஜி மொபைல் சிக்னலைப் பெற்றுள்ளனர் (30.04.2023 நிலவரப்படி, உத்தராகண்ட் மாநிலத்தில் 1.4 கோடி மொபைல் சந்தாதாரர்களும் 3.2 லட்சம் வயர்லைன் சந்தாதாரர்களும் உள்ளனர்).

· இதற்கான சேவைகள்  33,000 பிடிஎஸ் கொண்ட 9,000 கோபுரங்களால் வழங்கப்படுகிறது.

· உத்தராகண்டில் பல தொலைத்தொடர்பு கோபுரங்கள் 5ஜி திறனுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

பல ஆண்டுகளாக, உத்தராகண்ட் மாநிலத்தில் பின்வரும் சிறப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன:

Ø 354 யுஎஸ்ஒஎஃப் திட்டத்தில் 56 கோபுரங்களை உத்தராகண்ட் மாநிலத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளன, அவற்றில் 41 தளங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன, மீதமுள்ள தளங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Ø 4ஜி செறிவூட்டல் திட்டத்தில் மொத்தம் 1236 கிராமங்களை உள்ளடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, 360 கிராம இடங்களில் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் 382 கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் 77 கோபுரங்கள் 4ஜி கோபுரங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 4ஜி மொபைல் சேவையை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பாரத்நெட் திட்டம்: இத்திட்டத்தின்  முதல் கட்டத்தின் கீழ், 1849 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடக்கப்பட்டு இருந்தது. அதில் 1816 கிராமங்கள், ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 கிராமப் பஞ்சாயத்துக்களில் 2023 ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.