உலக சுற்றுச்சூழல் தினம் குறித்த ஆவணப்படம் திரையிடல்
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக்கல்லூரியின் உயிர் வேதியியல் துறை, இளைஞர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவத்திற்கான அறக்கட்டளையுடன் இணைந்து ஜூன் 5, 2023 அன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை நினைவுகூறும் வகையில் ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி பல்கலைக்கழக கீதத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து கல்லூரியின் வேதியியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் து. வரலட்சுமி வரவேற்புரையாற்றினார்.
‘பறவைக் கடிதங்கள்’ என்ற தலைப்பில் முனைவர் சிவசக்தி எழுதிய புத்தகம் வெளியிடும் நிகழ்வும் இந்த விழாவில் இடம் பெற்றிருந்தது. அறிவியல் தொடர்பாளரும் அஹா ஆக்டோபஸின் நிறுவனருமான முனைவர் சிவசக்தி, ஆவணப்படம் திரையிடல் மூலம் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களையும் தெளிவுபடுத்தினார். நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், பசுமையான எதிர்காலத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும் சமூகத்தின் தேவை என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்துவதே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நோக்கமாகும். உயிர் வேதியியல் துறை தலைவர் (பொறுப்பு) முனைவர் மா.தாரஹேஸ்வரி நன்றியுரை ஆற்றினார். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தையொட்டி போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது
உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தையொட்டி போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சைக்கிள் பேரணிக்கு 2023, ஜூன் 5 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிறுவனத்தின் முதன்மை வாயிலில் சிவிஆர்டிஇ-யின் இயக்குநர் திரு வி பாலமுருகன் சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை உறுதிமொழியை செய்து வைத்தார். அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் சுற்றுச்சூழலை பாதுகாத்து அவர்களுடைய குடும்பம், நண்பர்களுக்கு சுற்றுச்சூழலுக்கேற்ப முறையின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விளக்க வேண்டும் என்ற வகையில் இந்த உறுதி மொழி அமைந்தது.
இயற்கை வளங்கள் மற்றும் அனைவரது உடல் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற தகவலை அளிக்கும் வகையில், சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிவிஆர்டிஇ-யின் முதன்மை வாயிலில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய எட்டு கிலோ மீட்டர் தொலைவிலான சைக்கிள் பேரணி, பகல் 11.30-க்கு பாரதியார் நகர் குடியிருப்பு வளாகத்தில் நிறைவடைந்தது.
சைக்கிள் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் சிவிஆர்டிஇ இயக்குநர் திரு வி. பாலமுருகன் சான்றிதழ்களை வழங்கினார்.உலக சுற்றுச்சூழல் தினம்- இந்திய ராணுவம் கொண்டாடியது
தில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மானக்ஷா மையத்தில் ‘சுற்றுச்சூழல் கருத்தரங்கு’ மற்றும் ‘கண்காட்சி’யுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை திங்களன்று இந்திய ராணுவம் கொண்டாடியது. நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவத்தின் தளங்களில் 2023 மே மாதம் 3-ம் வாரத்தில் தொடங்கி நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கங்கள், தூய்மை செயல்பாடுகள் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.
இந்த நிகழ்வுக்கு ராணுவ துணைத்தலைமை தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் எம் வி சுசீந்திரகுமார் தலைமை தாங்கினார். லெப்டினென்ட் ஜென்ரல் ராஜீந்தர் திவான், வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி, ஏர்மார்ஷல் ஆர் கே ஆனந்த், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
‘பசுமையைப் பாதுகாக்கும் ஆலிவ் பசுமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரபல சுற்றுச்சூழல் வல்லுநர்கள் உரைநிகழ்த்தினர். கழிவுப்பொருள் மேலாண்மை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை, நிகர பூஜ்ய வீடுகளும், அலுவலகங்களும் போன்ற முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து இவர்கள் உரையாற்றினர்.
கருத்துகள்