புதுவைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரகம் சார்பில் ரத்ததான முகாம்
புதுவை இந்திரா காந்தி அரசுப் பொது மருத்துவமனையுடன் இணைந்து புதுவைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்குநரகம் சார்பில் 20 செப்டம்பர் 2023 அன்று ரத்ததான முகாம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. முகாமை பல்கலைக்கழகத்தின் கலாச்சாரம் மற்றும் கலாச்சார உறவுகள் சிறப்பு அலுவலர் பேராசிரியர் ராஜீவ் ஜெயின் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ரத்த தான முகாம்கள் உயிர் காக்கும் சேவையை செய்யக்கூடிய மிகப்பெரிய சமூகப்பணி என்று தெரிவித்தார்.
புதுவைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து இந்த ரத்ததான முகாமை நடத்திய இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையின் ரத்தமாற்று மருத்துவப் பிரிவின் தலைமை மருத்துவர் டாக்டர் டயானா ஷர்மிளா பேசுகையில், இத்தகைய மருத்துவ முகாம்கள் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் போது அது மிகப்பெரிய பலனை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய தொலைதூரக் கல்வி இயக்குநர் பேராசிரியர் அரவிந்த் குப்தா, ரத்ததான முகாம்களில் தாமாக முன்வந்து ரத்தத்தை கொடையாக அளிக்கும் இளம் மாணவர்கள் சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார்கள் என்று கூறினார்.
முகாமில் ரத்த தானம் வழங்கிய மாணவர்கள் அனைவருக்கும் பழச்சாறு வழங்கப்பட்டது.
இந்த ரத்ததான முகாம் காலையில் தொடங்கி மதிய உணவு இடை வேளை வரை நடைபெற்றது.
கருத்துகள்