ஆதி குணசேகரன் என்று பலராலும் அவர் நடிக்கும் கதாபாத்திரம் வாயிலாக அறிந்து அழைக்கப்பட்ட.. மக்கள் மத்தியில் தன் எதிர்மறைக் காதாபாத்திரம் மூலம் பார்க்கப்பட்ட நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து என்ற சேதுபதி இன்று காலை மரணமடைந்தார்
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து 'எதிர்நீச்சல்' தொடர் மற்றும் 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததால் கவனம் பெற்றார் மாரிமுத்துவின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கி போட்டுள்ளதற்கு தொலைக்காட்சித்தொடர் தான் காரணம் . 57 வயதானவர் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் அவரது வேடம் பேசப்பட்டது.,
ஜெயிலர் படத்தில் நடிகர்கள் ரஜினி காந்த், மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் திரையில் காணும் போது ரவிகர்களால் விசிலடிக்கப்பட்டது போலவே இவருக்கும் அடிக்கப்பட்டது. இவர் வரும் போதே "ஏம்மா ஏய்" என்று ரசிகர்கள் உற்சாகமாகவே கத்தி வரவேற்றனர்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் அவர் சொல்லும் வசனமிது. 'எதிர்நீச்சல்' நெடுந்தொடர் தனக்கு பெரும் புகழைத் தேடித் தந்திருப்பதாக அவரும் கூட பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஆதி குணசேகரன் என்ற பெயரில் இவர் நடித்து தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றவர் பாண்டிய நாட்டு மதுரைத் தமிழில் மிகுந்த உற்சாகத்துடன் பேசக் கூடியவர் மக்களிடையே பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தார். எதிர்மறைக் காதாபாத்திரமாகவே கவனிக்கப்பட்ட நடிகர் மாரிமுத்து இன்று காலை மரணமடைந்தார். : அவருக்கு நெருக்கமான சிலரும, சின்னத்திரையுலக பி ஆர் ஓக்களும் கூறுகையில்.. இன்று அதிகாலையே அவருக்கு டப்பிங் பேசும் போது நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அவருக்கு மூச்சுத் விடுவதில் சிரமமருந்தது. அதேபோல் அவரின் இதயத் துடிப்பும் வேகமாக இருந்துள்ளதற்கு அவர் சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை என்றும் இந்த நிலையில் காலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சரியாக 8.30 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். டப்பிங் பேசும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்ட போது அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு அருகில் வருசநாட்டுக்கு அருகில் பசுமலைத்தேரிக்கு உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் வருகை தந்தார்.
சின்னத்திரை தொடரான 'எதிர்நீச்சல்' தொடர் மூலம் பிரபலமானார். அதோடு தமிழில் பரியேறும் பெருமாள், கார்பன், எமன், வீரமே வாகை சூடும், 'ஜெயிலர்' படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகராக மட்டுமின்றி கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில், இவர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது
சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்
என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்
தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன்
குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார். அவரது உணவுப் பழக்கம், அவருக்கிருந்த பிரஷர், டென்ஷன் இவையே இந்த மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது அவரது திடீர் மறைவால் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில் அவரது சொந்த ஊருள்ள வருசநாடு பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அவரின் மறைவிற்கு சென்னையிலும் இன்று அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
கருத்துகள்