முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழாவும் 61 வது குருபூஜை விழாவும் சிறப்பாக நடந்தது.

தேசியமும்,தெய்வீகமும் இரு கண்களெனக் கூறிய ஒரு புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், 



தெய்வீகத் திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழாவும் 61 வது குருபூஜை  விழாவும் சிறப்பாக நடந்தது.      பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி மரியாதை மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவர் திருமகன் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

  பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்னில் தேவரின் நினைவிடத்துக்கு ஆண்டு தோறும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள்  அதில் அரசியல் விழாவாகவும் ஆன்மீக விழாவாகவும் நடக்கிறது.


இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நேற்றும் இன்றும்  உ.முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  பங்கேற்பதற்காக, விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு மதுரை வந்தடைந்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் மதுரைக்கு வருவதால்  மதுரையில் ட்ரோன் கேமராக்களை இயக்க மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.     அது குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாவின்  செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர், பல அரசியல் கட்சிகளின் தலைவா்கள், மற்றும் சமூக  அமைப்புகளைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் அக்டோபர் மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மதுரை மாவட்டத்துக்கு வருகை தருவதை அடுத்து,


மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மதுரை - இராமநாதபுரம் எல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் ட்ரோன் கேமராக்களை இயக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை உத்தரவை கண்காணிக்க காவல் துறை, வருவாய்த் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது." என உள்ளது . நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், அரசினர் விருந்தினா் மாளிகையில் தங்கி நேற்று காலை மதுரை கோரிப்பாளையத்திலுள்ள தேவா் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.  தொடர்ந்து சிலைக்குக் கிழ் வைக்கப்பட்டிருந்த. உ. முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கும் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்டோரும்,





திமுகவின்  நிர்வாகிகளும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.மேலும் தேவர் குருபூஜையில்  அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை செய்தனர்.  முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், வி.கே.சசிகலா நடராஜன் , மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாரதிய ஜனதா கட்சியின்  மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவா மாநில முதலமைச்சர்  மற்றும் சட்டமன்ற பாஜக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான  நயினார் நாகேந்திரன் , முக்குலத்தேவர் புலிப்படை சார்பில் பொதுச்செயலாளர் பாண்டித்துரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மலேசியா பாண்டியன் மற்றும் பல கட்சி, அமைப்புகளின் தலைவர்களும் மரியாதை செலுத்தினர். 



முமுக சார்பில் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் சசிக்கலா நடராஜன்  சார்பில் அன்னதானமும் நடந்தது , மதுரை கோரிப்பாளையத்திலுள்ள உ. முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு சசிகலா நடராஜன்  வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .



பின்னர் மதுரை தெப்பக்குளம் சந்திப்பிலுள்ள தியகசீலர்கள் முடிசூடா மன்னர்கள் சிவகங்கை சமஸ்தான தளவாய் பிரதானிகளான சுதந்திரப்போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் பசும்பொன் கிராமத்திற்கு சென்றார்.தமிழ்நாடு அரசு மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க அப்போது  மறுப்பு வெளியிட்டது காரணம் 




6 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பெருமை டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிக்குக் கிடைத்து  விடுமோ என்ற பயமே காரணம் .

தமிழ்நாட்டிலஹ தேவர் ஜெயந்திக் கொண்டாட்டங்கள் ஆவேசத்துடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகள் (கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை கட்சி (விசிகே), சில இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் மாவோயிஸ்டுகள் தவிர) மறைந்த தேசியத் தலைவர் உ. முத்துராமலிங்கத் தேவர் 30.அக்டோபர் 1966 முதல்  அவர்களுக்கு மரியாதையும், வணக்கமும் வெளிப்படுத்த ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர்.







நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய தென்னகத்தைச்  சேர்ந்த ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் . பார்வேடு பிளாக் மற்றும் INA உறுவான காலம் முக்கியமானது தமிழ்நாட்டு தேசியவாதிகளுக்கு தேவர் ஒரு தனிப்பெருமை. பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் கட்டளையிட்டது போன்ற மரியாதையும் பிரமிப்பும் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் வழங்கப்பட்டதா எனத் தெரியவில்லை. 2013-ஆம் ஆண்டு மதுரை கோரிப்பாளையத்ல் நிறுவப்பட்ட தேவர் சிலையை அலங்கரித்தது முன்னால் முதல்வர் காலம்சென்ற ஜெ.ஜெயலலிதா பசும்பொன்னில் 15 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை வழங்கினார்.  ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக் கவசம் வழங்கினார் தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் கோலோச்சிய ஒரு மஹா ஜாம்பவான் தேவர் திருமகன் என்று சொன்னால் அது மிகையாகாது.




தமிழ்நாட்டை  ஆண்ட அன்றைய அரசுகள் சென்னையிலும், மதுரையிலும் ஒன்றிரண்டு தேவர் சிலைகளை நிறுவியுள்ளன. பிறப்பும் மற்றும் இறப்பும் ஒரே தேதிகளுடன் அவரது தனித்துவமான வாழ்க்கை ஆன்மீகமாக ஒரு பிரமச்சாரியம் இருந்தது. தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் வாதிகள் பொது இடங்கள், பூங்காக்கள், நினைவிடங்கள் போன்றவற்றுக்கு பெயர் வைக்க ஒருவரை யொருவர் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், தேவர் போன்ற ஒரு தேசியத் தலைவருக்கு அவர் பெயரில் பசும்பொன் தவிர எந்த நினைவிடங்களுமில்லை என்பதும்.



அதனால் மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முனஸனால் முன்னாள் மத்திய சட்டம் மற்றும் வணிக வர்த்தகத்துறை அமைச்சருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். 1998 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டியிட்ட போது, ​​விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட வேண்டுமென்ற முனைவர் சுவாமியின் இந்த பணிக்கான அர்ப்பணிப்பானது, அவர் மதுரை வாக்காளர்களுக்குச் செய்த அர்ப்பணிப்பிலிருந்து எழுகிறது . மற்ற அரசியல்வாதிகளைப் போல் டாக்டர் சுவாமி ஒரு ஓட்டப்பந்தய வீரர் அல்ல. ஏதோ வாக்குறுதி அளித்துவிட்டு, சில நொடிகளில் அதை மறந்துவிடுகிற அரசியல்வாதியுமல்ல .


1998 ஆம் ஆண்டு முதல், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்ட டாக்டர் சுவாமி தொடர்ந்து முயற்சி செய்கிறார். ஆனால் அவரது அனைத்து முயற்சிகளும் சில சிறுபான்மை சக்திகளால் கல்லெறியப்பட்டுவிட்டன. தேவர் நினைவுகளில் தங்களின் அலாதியான பக்தியை தமிழகத்தின்  பொது மக்களுக்கு உணர்த்த அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டாலும், மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்கொண்ட கணத்தில் அவர்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல தினறுகிறார்கள்.



2011ஆம் ஆண்டு முதல் தமிழநாட்டை தொடர்ந்து ஆட்சி செய்து வரும் அதிமுக, தேவர் நினைவை நிலைக்கச் செய்ய எதையும் செய்யவில்லை. இந்த விஷயத்தில் டாக்டர் சுவாமியின் அர்ப்பணிப்பு, அதிமுக திமுக அரசியல்வாதிகளின் இரட்டை நிலை மற்றும் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தும் சில உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.  இந்த விஷயத்தில் தி.மு.க.விடம் எதையும் எதிர்பார்ப்பது நடக்காது என்றாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவர் பெயரைச் சொல்லி வாக்கு வங்கி உள்ள அ.தி.மு.க.

பொது இடங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயரை சூட்டுவது தொடர்பான மத்திய அரசின் சட்டங்களின் படி, சம்பந்தப்பட்ட மாநில அரசு, அத்தகைய நடவடிக்கையை பரிந்துரைக்கும் அல்லது முன்மொழியும் முன்மொழிவை தற்போது பாஜக அரசு மத்தியிலிருந்து தொடங்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டுவது  தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு டாக்டர் சுவாமி கடிதம் எழுதியிருந்தார். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து அவர் பெற்ற பதில் தமிழக மக்களுக்கு ஒரு வெளிப்பாடாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாடு குறித்து மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தமிழ்நாடு அரசு அளித்த பதில் அதிர்வளிக்கிறது.


“இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழகத்தில் உள்ள எந்த ஒரு பொதுக் கட்டிடங்கள், இடங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு கடந்த கால மற்றும் நிகழ்கால அரசியல் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட மாட்டாது என கொள்கை முடிவு எடுத்துள்ளனர்” என்று டாக்டர் சுவாமியின் கேள்விக்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பதிலளித்துள்ளது.




மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டுமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுக்குமா என்பது தெரியவில்லை என கடந்த கால முதல்வர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குமே நெருக்கமான அரசியல் தலைவர் ஒருவர்  தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலுள்ள எந்தப் பொதுக் கட்டிடங்கள், இடங்கள், மாநகராட்சிகளுக்கு அரசியல் தலைவர்களின் பெயர் சூட்டப்பட மாட்டாது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ள பதில்  உண்மை என்றால். சென்னை கோட்டூர்புரத்தில் பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொது நூலகத்திற்கு 2010 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று தான்  பெயர் சூட்டப்பட்டது .






உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு எம்ஜிஆர் விமான நிலையம் என்று தான்  பெயர் சூட்டப்பட்டது மத்திய அரசு மறுத்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,  2013 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவை முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா புறக்கணித்தார் . அப்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி புதிய விமான நிலைய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நாளில் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். (தி.மு.க., அ.தி.மு.க., அரசுகள், திட்டங்களுக்கும், கட்டடங்களுக்கும், பொது இடங்களுக்கும், தங்களுக்கு விருப்பமான தலைவர்களின் பெயரை சூட்டுவதில், போட்டி போட்டுக் கொள்கின்றன. கலைஞர் மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்குத் தன் பெயரைச் சூட்டும் அளவுக்குச் சென்றார் . அவரால் தொடங்கப்பட்ட டாக்டர் கலைஞர் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தை, 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவால் முடக்கப்பட்டு, அவர் அம்மா சுகாதாரத் திட்டத்தை மீண்டும் தொடங்கினார். அதேபோல




ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி போன்றவர்களுக்கு பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவுகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் மட்டுமே தேவர் சமூகத்தின் வாக்குகளைப் பெற பயன்படுத்துகின்றன. தேசபக்தியும் தீவிரமும் கொண்ட தேவர் சமூகம் என்பது  இந்தச் சிறுமையை மறக்காது எனத் தெரிவித்தார் முக்குலத்தேவர் புலிப்படையின் ஒரு முக்கியத் தலைவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...