முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜயதசமி விழாவில் பிரதமர் உரை

 டெல்லி துவாரகாவில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பிரதமர் உரை

"இது தீர்மானங்களை புதுப்பிக்கும் நாள்"


"இந்தியாவில் ஆயுதங்கள் அபகரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன"

"ராமரின் 'மர்யதா' (எல்லைகள்) மற்றும் எங்கள் எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்.

"ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் கோயில் பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு இந்தியர்களாகிய எங்கள் பொறுமைக்கு கிடைத்த வெற்றியின் சின்னமாகும்" என்று தெரிவித்துள்ளார்.

"ராமரின் சிந்தனைகள் அடங்கிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்"

இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், மிகவும் நம்பகமான ஜனநாயக நாடாகவும் உருவெடுத்து வருகிறது.

"சமூகத்தில் உள்ள தீமைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் உறுதியேற்க வேண்டும்"

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று டெல்லியில் உள்ள துவாரகாவில் ராம் லீலாவில் பங்கேற்றார்.விஜய தசமியையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து

விஜய தசமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தப் புனிதமான பண்டிகை எதிர்மறை சக்திகளின் முடிவைக் குறிக்கிறது. வாழ்க்கையில் நல்லவற்றைத் தழுவுவதற்கான செய்தியைக் கொண்டுவருகிறது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“நாடு முழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஜயதசமி நல்வாழ்த்துக்கள். இந்தப் புனிதப் பண்டிகை எதிர்மறை சக்திகளை ஒழித்து வாழ்வில் நன்மையைக் கடைப்பிடிக்கும் செய்தியைக் கொண்டுவருகிறது.

அனைவருக்கும் விஜய தசமி நல்வாழ்த்துக்கள்!’’

விழாவில் பேசிய பிரதமர், அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி, ஆணவத்திற்கு எதிராக பணிவு, கோபத்தின் மீது பொறுமை ஆகியவற்றின் வெற்றியின் திருவிழா விஜயதசிமி என்று கூறினார். உறுதிமொழிகளை புதுப்பிக்கும் நாள் இது என்றும் அவர் கூறினார்.

சந்திரயான் தரையிறங்கி சரியாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த முறை நாம் விஜய தசமியைக் கொண்டாடுகிறோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த நாளில் சாஸ்திர பூஜை மரபைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தியாவில் ஆயுதங்கள் அபகரிப்புக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, மாறாக தற்காப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன எனறார்.  சக்தி பூஜை என்பது முழு படைப்பின் மகிழ்ச்சி, நல்வாழ்வு, வெற்றி மற்றும் மகிமைக்காக வாழ்த்துவதாகும் என்று அவர் கூறினார். இந்தியத் தத்துவத்தின் நித்திய மற்றும் நவீன அம்சங்களை அவர் வலியுறுத்தினார். "ராமரின் 'மர்யதா' (எல்லைகள்) மற்றும் நமது எல்லைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

"ராமர் பிறந்த இடத்தில் கட்டப்படும் கோயில் பல நூற்றாண்டு காத்திருப்புக்குப் பிறகு இந்தியர்களாகிய நம் பொறுமைக்கு கிடைத்த வெற்றியின் அடையாளமாகும்" என்று பிரதமர் கூறினார். அடுத்த ராம நவமி, ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்வது உலகம் முழுவதும் மகிழ்ச்சியை பரப்பும் என்று அவர் கூறினார். "பகவான் ஸ்ரீ ராமர் விரைவில் வரவிருக்கும் தருணம்", பகவான் ராமரின் வருகை விரைவில் உள்ளது என்று பிரதமர் கூறினார். ராமசரித மானஸில் விவரிக்கப்பட்டுள்ள வருகையின் அறிகுறிகளை நினைவுகூர்ந்த பிரதமர், இந்தியாவின் பொருளாதாரம் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது, நிலவில் இறங்குவது, புதிய நாடாளுமன்ற கட்டிடம், நாரி சக்தி வந்தன் அதினியம் போன்ற இதே போன்ற இப்போது இருக்கும் அறிகுறிகளை குறிப்பிட்டார். "இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாகவும், மிகவும் நம்பகமான ஜனநாயகமாகவும் உருவெடுத்து வருகிறது", என்று அவர் கூறினார். ராமர் இதுபோன்ற நல்ல அறிகுறிகளின் கீழ் வருவதால், "ஒரு வகையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் அதிர்ஷ்டம் இப்போது உயரப் போகிறது" என்று பிரதமர் கூறினார்.

சமூகத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்திகள், சாதியம் மற்றும் பிராந்தியவாதம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பதிலாக சுயநலம் பற்றிய சிந்தனை ஆகியவற்றுக்கு எதிராக விழிப்புடன்  இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். "சமூகத்தில் உள்ள தீமைகள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் உறுதியேற்க வேண்டும்", என்று அவர் கூறினார்.

இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். ராமரின் சிந்தனைகள் அடங்கிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். தற்சார்பு கொண்ட வளர்ந்த இந்தியா, உலக அமைதியின் செய்தியை வழங்கும் வளர்ந்த இந்தியா, அனைவருக்கும் தங்கள் கனவுகளை நிறைவேற்ற சம உரிமை உள்ள இந்தியா, மக்கள் செழிப்பு மற்றும் மன நிறைவை உணரும் வளர்ந்த இந்தியா. இதுதான் ராம் ராஜியத்தின் தொலைநோக்குப் பார்வை" என்றார்.

இந்த நிலையில், தண்ணீரை சேமித்தல், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல், தூய்மை, உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுத்தல், தரமான பொருட்களை தயாரித்தல், வெளிநாடு பற்றி சிந்திக்கும் முன் நாட்டைப் சுற்றிப்பார்த்தல், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், சிறுதானியங்களை ஊக்குவித்தல் மற்றும் பின்பற்றுதல்,  உடற்தகுதி, இறுதியாக "ஒரு ஏழைக் குடும்பத்தின் சமூக அந்தஸ்தை அவர்களின் குடும்பத்தில் உறுப்பினராக்குவதன் மூலம் உயர்த்துவோம்" போன்ற 10 தீர்மானங்களை அனைவரும் எடுக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். "நாட்டில் அடிப்படை வசதிகள் இல்லாத, வீடு, மின்சாரம், எரிவாயு, தண்ணீர், சுத்திகரிப்பு வசதிகள் இல்லாத ஒரு ஏழை கூட நாட்டில் இருக்கும் வரை, நாங்கள் ஓயமாட்டோம் பணியும் தொடரும்" என்று பிரதமர் மோடி கூறி முடித்தார். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

சாரதா நவராத்திரி - சரத் சந்திர காலம் அஷ்டமி, நவமி, தசமி மஹா என்ற சிறப்புக்களுடன் கொண்டாடப்பெறும் வழக்கம்.

"அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்."

என்பது திருவள்ளுவம். "அறிவு ஆயுதமாகிறது." அறிவு அற்ற ஆயுதம் பயனற்றது என்பது கர்ணனின் வில்லாண்மை. கவனம் சிதறாமை கருத்தாக்கம், சமயோகிதம், மறவாமை,  பதராமை  சிந்தித்தவுடன் செயல்படும் பிரசன்ன வித்தை. 

ஆயுதபூஜையும், சரஸ்வதி பூஜையும் ஒன்றாகவே பூஜித்த பொருள் உணர்ந்த நம்முன்னோர், அறிவு எப்பொருளையும் ஆயுதமாக்கும். தன்னை காக்கும். எதிராளியையும் அழிக்கும்.

"சர்வாயுதனே நமஹ" "சர்வ ப்ரஹரணாயுதாய நமஹ"  என்பது ஸஹஸ்த்திர நாமம். துரும்பும், துரத்தும் ஆயுதமாக, ஆயுதம் வேறு, ஆயுதம் தரிப்பவன் வேறு என்றல்லாமல் ஒன்றாகவே அடையாளம் கொண்டனர். நம் முன்னோர் பிரம்மனுக்கு கமண்டலத் தீர்த்தமே ஆயுதம். அதனைக் கொண்டு எதிரிகளின்  தைரியத்தை இழக்கச் செய்வது என்பர். மோசமான ஆயுதம்தானே!

பாரதம் பற்பல ஆயுதங்களால் என்றும் சிறந்து விளங்கி வருகிறது. இன்று ப்ரித்வி, ஆகாஷ், அக்னி என அணுவை சுமக்கும் ஆயுதங்கள். அணுவை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சுமக்கும் ஆயுதங்களுக்கே மகிமை. அவை வாகனங்களே; இன்று ஒளி வேகத்தில் சுமக்கும் ஆயுதங்களாக; இந்த வாகனங்கள் ஒலி, ஒளி ஆயுதங்கள். அன்றும் கதிர்வேல் ஒரு ஆயுதம். சப்தவேதி ஒரு ஆயுதம். சுமக்கும் ஆயுதங்கள் இந்த வாகனங்கள். ஒலி, ஒளி ஆயுதங்கள் நம் ஆசை. உலகை அழிக்க பயன்படும் அணு ஆயுதங்களை இருந்த இடத்திலேயே செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதே.

ஆகமங்களில் ஆயுதமும், வாகனமும் சம அந்தஸ்து உடையவை. அரசனை சுமக்கும் முரசுக்கட்டில், அரியணை, பட்டத்து யானை, பட்டத்து புரவி என தொடங்கி ஆண்டவனைச் சுமக்கும் வாகனங்கள் என சிறப்பு பெறுவது போல இக்காலத்தில் ஆயுதங்களின் பூஜையில் வாகனங்கள் நாம் பயன்படுத்தும் நிலை பூஜையில் இடம்பெறுகின்றன. மருத்துவமனையில் உயிர் காக்கும் வண்டிக்கும் மாலை மரியாதை. 

"விஷ்ணு ஸஹஸ்த்திர  நாமத்தில்" இரண்டு மந்திர ஸ்லோகம்

"விஷ்ணும் ஜிஷ்னும் மகாவிஷ்ணும் பரமவிஷ்ணும் மஹேஸ்வரம்

அநேக ரூப தைத்யாந்தம் நமாமி புருஷோத்தமம்" 

    என எங்கும் நிறைந்தவனாய், ஜயசீலனாய், அனைத்துள்ளும் உறைபவனாய், மகேசுவரனாய், பலவடிவங்கொண்ட அசுரர்களை முடிப்பவனாய், புருஷோத்தமனாய் விளங்கும் மகாவிஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்.

"நம: ஸமஸ்த பூதான- மாதி - பூதாய பூப்ருதே

அநேக- ரூப - ரூபாய விஷ்ணவே ப்ரப விஷ்ணவே"

    எல்லாப் பொருளுக்கும் ஆதியாய், பூமியை தாங்குபவராய் பலவகை வடிவங்களைக் கொண்டவராய் பிரபுவாய் விளங்கும் விஷ்ணுவுக்கு நமஸ்காரம்.

எல்லாமாகவும் இருக்கும் இறைமையிலேயே அசுர தன்மையும் இருக்க அதனை வெல்பவராகவும், சுட்டிக்காட்டப்படுகிறது. உட்பகை, வெளிபகை வேறு இடத்தில் இருந்தா வருகிறது? நமக்குள்ளே தான்! அது திருத்தப்பட வேண்டும். திருந்த வேண்டும். ஏன் நம்மில் இருந்து தானே வருகிறது.

உட்பகை, வெளிபகைகளை வெல்வதற்கு பகை கடிதல் என்கிறார் நம் குமரகுருதாஸ முனிந்திரர் பகை கடிய குகனின் வாகனத்தையே மாமயிலையே வரவழைகிறார்; குருகுகன் முதன்மயிலே கொணர்த்தி உள் இறைவனையே என்பதாக ஆக வாகனம் நமது ஆயுதம்  அறிவு. அது ஏவுகணையாக இருக்கலாம். எழுது கோலாக இருக்கலாம். உழவு முதல் எந்த தொழில் கருவியாகவும் இருக்கலாம். அது புதுமை பெற வேண்டும், புதுபிக்க வேண்டும். பொழிவு பெற வேண்டும். அது பூஜையாகிறது. 

அமி எந்திரே; துமி எந்திரி இது குருதேவர் உபதேசம் யான் சிறந்த எந்திரமாக இருக்க வேண்டும். இறையே என்னை இயக்கும் எந்திரமாக நீ இருக்கிறாய் உள்ளார்ந்த செயல் புதிய பொழிவு என்றும் வெற்றி இனிய விஜயதசமியாகும்.சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பட்டமங்கலம்  அருள்மிகு ஸ்ரீமதியாதி கண்ட விநாயகர் ஸ்ரீஅழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில் ஆயுத பூஜை, கொலு தர்பாரில் அம்பிகையின் குதிரை வாகனம் மட்டும் விருதுகளுடன் திருவீதி பவனி வருவது வெகு காலம் தொட்ட மரபு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு