விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் வாழ்த்து
விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது::
“விமானப்படை தினத்தை முன்னிட்டு அனைத்து விமானப்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள். இந்திய விமானப்படையின் வீரம், உறுதி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவர்களின் மகத்தான சேவையும், தியாகமும் நமது வான் வழி பாதுகாப்பை உறுதி செய்கிறது.”
கருத்துகள்